For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று உலக எய்ட்ஸ் தினம்!… அனைத்திலும் கவனம்!… ஆபத்தை தடுக்க கடைபிடிக்கவேண்டியவை!

07:21 AM Dec 01, 2023 IST | 1newsnationuser3
இன்று உலக எய்ட்ஸ் தினம் … அனைத்திலும் கவனம் … ஆபத்தை தடுக்க கடைபிடிக்கவேண்டியவை
Advertisement

உலக எய்ட்ஸ் தினம் 2023 இன்று அனுசரிக்கப்படுகிறது. கொடிய ஆட்கொல்லி நோயான எய்ட்ஸை உண்டாக்கும் ஹெச்.ஐ.வி தொற்றை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

ஹெச்.ஐ.வி என்பது மனித நோயெதிர்ப்பு வைரஸை குறிக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்களை பாதித்து அழித்து, மற்ற நோய்கள் எதிர்த்து போராடுவதை கடினமாக்குகிறது. இவை கடுமையாக பலவீனப்படுத்தும் போது அது எய்ட்ஸ்க்கு வழிவகுக்கும். யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஹெல்த் அண்ட் ஹ்யூமன் சர்வீசஸ் படி ஹெச்.ஐ.வி உள்ளவர்களில் கிட்டத்தட்ட 14% பேருக்கு தெரியாது என்பதால் இதை மற்றவர்களுக்கு பரவலாம். அதனால் ஹெச்.ஐ.வியை தடுப்பது முக்கியம். இந்த தொற்றுக்கான வாய்ப்பை குறைக்க பல வழிகள் உள்ளன.

ஹெச்.ஐ.வி மற்றும் பிற எஸ்டிஐ பரவுவதை தடுக்க ஆணுறையை பயன்படுத்தலாம். ஆண் உறைகள் உடல் திரவங்கள் மூலம் தொற்று பரவுவதை தடுப்பதால் பாலியல் உறவின் போது இது கட்டாயமாகிறது. ஆண்களை போன்று பெண்களுக்கும் பெண் உறை உள்ளது. ஒவ்வொரு முறை உடலுறவின் போதும் ஆணுறை / பெண்ணுறை பயன்படுத்த வேண்டும். விந்து வெளியேறும் போது மட்டும் அல்ல. அதனால் பாதுகாப்பான ஆணுறையை அணியுங்கள்.

உங்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று பரவும் வாய்ப்புகள் என்பது பலருடன் பாலியல் உறவை பங்கெடுத்துகொள்வதால் நேரலாம். ஏனெனில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு இருக்கலாம். அது பல கூட்டாளர்களை கொண்டிருக்கலாம். அவர்கள் உறவின் போது ஹெச்.ஐ.வி அல்லது எஸ்.டி.ஐ களை பரப்பலாம். அதே நேரம் உடல் திரவங்கள் பரிமாறாத நெருக்கமான உறவை கொள்ளலாம். ஏனெனில் உடல் திரவங்களை பகிர்ந்து கொண்டால் மட்டுமே தொற்று நேரிடலாம். மேலும் யோனி, குத மற்றும் வாய்வழி செக்ஸ் தடை முறைகள் ஹெச்.ஐ.வி தொற்று அல்லது பரவும் வாய்ப்புகளை அதிகரிக்கும். நீங்கள் இத்தகைய உறவை தவிர்த்து உங்கள் துணையுடன் மட்டுமே உறவு கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் ஆணுறை அல்லது பிற தடுப்பு முறைகளை பயன்படுத்தவும்.

ஹெச்.ஐ.வி மற்றும் பிற எஸ்.டி.ஐ தொற்றுகள் உள்ளதா என்பதை சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இந்த வழக்கமான சோதனைகள் நீங்கள் சீரான இடைவெளியில் செய்வது நல்லது. இதன் மூலம் நீங்கள் தொற்றுக்கு ஆளாகியிருந்தால் இந்த நிலைமைகளை குறைக்கலாம். மேலும் நீங்கள் மட்டும் தனித்து அல்லாமல் பாலியல் துணையுடன் இணைந்து பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நீங்கள் எஸ்டிஐ மற்றும் ஹெச்.ஐ.வி தொற்று பரப்பவில்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளலாம்.

ஹெச்.ஐ.வியிலிருந்து உங்களை பாதுகாக்கும் மருந்துகளை தவிர்க்காதீர்கள். பாலியல் சந்திப்புக்கு முன்னும் பிறகும் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க நீங்கள் எடுத்துகொள்ள வேண்டிய மருந்துகள் உள்ளன. அதில் ப்ரீ - எக்ஸ்போஷர் ப்ரோபிலாக்ஸிஸ் என்பது ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை குறைக்க தினசரி வாய்வழியாக எடுத்துகொள்ளும் மருந்து. ஏற்கனவே ஹெச்.ஐ.வி தொற்றுடன் வாழும் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருந்தால் கிருமி நீக்கம் செய்யப்படாத அல்லது பகிரப்படாத ஊசிகள் கொண்ட மருந்துகளை நீங்கள் எடுத்துகொள்ளுங்கள் ஹெச்.ஐ.வி தொற்று பற்றி நீங்கள் கவலைப்பட்டால் பாலியல் சந்திப்பு பிறகு நீங்கள் எடுத்துகொள்ள வேண்டிய மருந்து உள்ளது. இது போஸ்ட் எக்ஸ்போசர் ப்ரோபிலாக்ஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை உடலுறவு கொண்ட 72 மணி நேரத்துக்குள் இந்த மருந்தின் ஆரம்ப அளவை எடுத்துகொள்ள வேண்டும். பிறகு 28 நாட்களுக்கு கூடுதல் அளவை பின்பற்ற வேண்டும்.

மற்றவர்களுடன் ஊசிகளை பகிர்ந்து கொள்வது அல்லது சட்ட விரோத மருந்துகளை எடுத்துகொள்வது கிருமி நீக்கம் செய்யாத ஊசிகளை பயன்படுத்துவது ஹெச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் போன்ற பிற மோசமான நிலைகளை உண்டு செய்யும். நீங்கள் ஊசி போடும் போது கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களில் முக்கியமானது ஊசிகளை மற்றொரு நபருடன் எப்போதும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஒரு முறை தானே என்னும் அலட்சியம் கூட ஹெச்.ஐ.வி தொற்றை உண்டு செய்துவிடும். கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசிகளை பயன்படுத்துங்கள். ஊசிகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

ஹெச்.ஐ.வி தொற்று மோசமான கொடிய நிலையை உண்டு செய்துவிடக்கூடியது. இயன்றவரை ஒருவனுக்கு ஒருத்தி என்னும் வாழ்க்கை முறை பாதுகாப்பானதாக இருக்கும். இந்த ஹெச்.ஐ.வி நோயை தடுக்க பல வழிகள் உண்டு. இவை அனைத்தையும் கடைப்பிடிப்பதன் மூலம் வைரஸ் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும். நீங்கள் தொற்று ஏற்பட்டிருப்பதை சந்தேகித்தால் தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வதோடு ஆரம்பத்திலேயே சிகிச்சையளிப்பது பாதுகாப்பானது.

Tags :
Advertisement