FASTag-ல் கேஒய்சியை புதுப்பிக்க இன்றே கடைசி!… தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவுரை!
FASTag: சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும் பாஸ்ட்டேக்கில் கேஒய்சி விவரத்தை புதுப்பிக்க இன்றே கடைசி நாளாகும். புதுபிக்கவில்லையெனில் பாஸ்டேக் கணக்கு முடக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அறிவுறுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். சாலைகள் பராமரிப்பு போன்ற காரணங்களுக்கான இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் நிறையப் பேருக்கு இது தலைவலியாகத் தெரியலாம். ஆனால் சுங்கக் கட்டணம் செலுத்தியே ஆகவேண்டும். சுங்கக் கட்டணம் அவ்வப்போது உயர்த்தப்பட்டும் வருகிறது.
சுங்கச் சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களில் இப்போது ஃபாஸ்டாக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஃபாஸ்டாக் இல்லாமல் பயணித்தால் இரு மடங்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்டாக் ஆக்டிவாக இருப்பது அவசியம்.
ஃபாஸ்டாக் விஷயத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, ஃபாஸ்டாக் கணக்கில் KYC சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைக்குள் (மார்ச் 31) ஃபாஸ்டாக் பயனாளிகள் அனைவரும் கேஒய்சி சரிபார்ப்பு செய்ய வேண்டும். இல்லையென்றால் பாஸ்டேக் கணக்குகள் முடக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் இல்லாமல் நேரடி செயல்முறையிலும் நீங்கள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம். அதற்கு நீங்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரடியாகச் சென்று தேவையான ஆவணங்களைக் கொடுத்து கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம். வங்கியிலேயே இதற்கான படிவம் இருக்கும். அந்தப் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.