நெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்..!! எப்படி செய்வது..?
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நெட் நுழைவுத் தேர்வு, இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படும் என்று அண்மையில் யுஜிசி அறிவித்தது.
இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி முறையில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் ஏதேனும் இருந்தால், மேற்கொள்ளலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இதற்கு இன்று (மே 23) இரவு 11.59 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கூடுதல் கட்டணத்தை, கிரெடிட் / டெபிட் கார்டுகள் அல்லது நெட் பேங்க்கிங் மூலம் செலுத்தலாம்.
திருத்தம் செய்வது எப்படி..?
* தேர்வர்கள் https://ugcnet.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* விண்ணப்ப எண், கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளிட்டு, உள்ளே செல்ல வேண்டும்.
* திருத்த வேண்டிய விவரங்களை உள்ளிட்டு, சப்மிட் கொடுக்க வேண்டும்.
Read More : மாணவர்களுக்கு ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை கிடைக்கும்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே..!!