For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

08:45 AM Nov 30, 2023 IST | 1newsnationuser6
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்     மிஸ் பண்ணிடாதீங்க     உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Advertisement

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதற்கட்ட தேர்வு, பிரதான தேர்வு என இரண்டு பிரிவுகளாக நடைபெறும். இதில் முதற்கட்ட தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை மூலம் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

அதன்படி 2024-25ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதற்கட்ட தேர்வு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த நவம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் விண்ணப்பிக்கின்றனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (நவம்பர் 30) முடிவடைகிறது.

விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும். இதன் முடிவுகள் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடப்படும். இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட இதர தகவல்கள் பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்தால், மாணவர்கள் 011-40759000/69227700 என்ற எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement