முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நோட்...! இந்த 10 மாவட்ட மக்கள் அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்...!

Today is the last day for people in these 10 districts to pay their electricity bills without penalty.
05:55 AM Dec 10, 2024 IST | Vignesh
Advertisement

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள் என்பதால் அபராதத் தொகை இல்லாமல் மாலை வரை செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

அதே போல ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில்கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிச.10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள் என்பதால் அபராதத் தொகை இல்லாமல் இன்று மாலை வரை செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags :
ChennaicuddaloreCycloneEB billkanchipuramTV Malai
Advertisement
Next Article