Tax: நாளை முதல் ரூ.5000 வரை அபராதம்... வருமான வரி செலுத்த இன்றே கடைசி நாள்...!
2024-25 நிதியாண்டில் தனிநபர்கள், நிறுவனங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் இன்றே கடைசி நாள் ஆகும்.
2024-25 நிதியாண்டில் வருமான வரி கணக்கை தனிநபர்கள், நிறுவனங்கள் என தற்போது வரை 10 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 847 பேர் தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.19 லட்சத்து 61 ஆயிரத்து 823 கோடி வரி வசூலாகி உள்ளது. தமிழகத்தின் பங்களிப்பு மட்டும் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 67 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. 2023-24-ம் நிதியாண்டுக்குரிய வருமான வரி கணக்கை தனிநபர்கள், நிறுவனங்கள் என தற்போது வரை 10 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 847 பேர் தாக்கல் செய்திருக்கிறார்கள். அப்படி வருமான வரி தாக்கல் செய்தவர்கள் மூலம் அரசுக்கு ரூ.19 லட்சத்து 61 ஆயிரத்து 823 கோடி வரி வசூலாகி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 67 கோடியாக வருமான வரியாக பங்களிப்பு கிடைத்துள்ளது.
வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள் அல்லது வருமான வரி தாக்கலில் ஏஎதேனும் தவறு செய்தவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவும், தாக்கல் செய்த வருமான வரி தகவலில் உள்ள தகவலில் உள்ள தவறுகளை சரி செய்யவும் இன்னும் வாய்ப்பு உள்ளது. 5,000 தாமதக் கட்டணத்தைச் செலுத்தி, 2024-25ம் ஆண்டிற்கான (AY 2024-25) உங்கள் வருமான வரி தக்கலை இன்று மாலை வரை தாக்கல் செய்யலாம். இந்த காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் சிக்கலில் சிக்கலாம் என்பதோடு அபராதத் தொகையும் அதிகரிக்கலாம்.
பிரிவு 139(1) இன் கீழ், நிர்ணயிக்கப்பட்ட தேதி அல்லது அதற்கு முன் தாக்கல் செய்யப்படாத வருமானம் தாமதமான வருமான வரி தாக்கல் எனப்படும். பிரிவு 139(4)ன் கீழ் தாமதமான வருமான வரி தாக்கல் செய்யப்படுகிறது. பிரிவு 234F இன் படி, பிரிவு 139(1) இன் கீழ் காலக்கெடுவுக்குப் பிறகு ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டால், தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணம் ரூ. 5,000 செலுத்த வேண்டும். இருப்பினும், நபரின் மொத்த வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், அவர் தாமதமாக தாக்கல் செய்வதற்காக கட்டணமாக ரூ.1,000 மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும்.