பிரம்மன் உலகத்தைப் படைத்த முதல்நாள் இன்று!… தமிழ் புத்தாண்டின் வரலாறு, முக்கியத்துவம்!
Tamil New Year: இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். தமிழ் நாள்காட்டியில் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இது வழக்கமாக ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வருகிறது. கேரளம், மணிப்பூர், அசாம் போன்ற மாநிலங்களிலும், நேபாளம், பர்மா, இலங்கை போன்ற அண்டை நாடுகளிலும் சித்திரை மாதத்தில்தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள் 6 மணி நேரம் 11 நிமிடம் 41 நொடிகள் ஆகின்றன. இதுவே தமிழ் வருடத்திலும் கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு மீன ராசியில் இருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே, தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே தமிழ் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.
பத்தாண்டின் வேர்கள் பழங்கால தமிழ்நாட்டைக் குறிப்பிடும் கிமு இரண்டாம் நூற்றாண்டின் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. புத்தாண்டின் தோற்றத்தை பண்டைய தமிழர் வரலாற்றில் இருந்து அறியலாம். சித்திரை (சைத்ர) மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தைப் படைத்ததாகப் பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இது புதிய தொடக்கங்களுக்கு மிகவும் நல்ல நேரமாக அமைந்தது.
இந்த நாளில், சிவபெருமான் தாண்டவம் எனப்படும் தனது பிரபஞ்ச நடனத்தை நிகழ்த்தினார், இது படைப்பின் தொடக்கத்தைக் குறிக்கிறது. எனவே புத்தாண்டு புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும். சித்திரை மாதம் தமிழர் புத்தாண்டுக்கு முந்தைய நாட்களில் வீடு வாசலை சுத்தம் செய்வதிலும் அலங்கரிப்பதும், தலைவாசலில் மா,பலா, வாழை ஆகிய முக்கனிகளில் அலங்கரிக்கின்றனர்.
புத்தாண்டு வழிபாட்டில் வாசனை மிகுந்த மலர்கள், வெற்றிலை, பாக்கு, பொன்னால் ஆபரணங்கள், நெல் முதலான மங்கலப் பொருள்கள் வைத்த தட்டை வழிபாட்டு அறையில் வைத்து அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாக கருதப்படுகிறது.
Readmore: DRUG முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது திமுக!… ஓட ஓட விரட்டவேண்டும்!… நிர்மலா சீதாராமன் விளாசல்!