முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்று கார்த்திகை முதல்நாள்!. தூக்கத்தில் இருந்து கண்விழிக்கும் மகாவிஷ்ணு!. வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்!

Today is the first day of Karthik! Mahavishnu waking up from sleep! Wishes will surely come true!
06:10 AM Nov 16, 2024 IST | Kokila
Advertisement

Karthigai first day: கார்த்திகை முதல் தேதி என்றாலே சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவது தான் அனைவருக்கும் நினைவிற்கும் வரும். ஆனால் கார்த்திகை மாதம் சிவ பெருமான், முருகன் ஆகியோர் வழிபாட்டிற்கும் மிகவும் ஏற்ற மாதமாகும். கார்த்திகை முதல் தேதியன்று இந்த ஆண்டு மிகவும் சிறப்புக்குரிய நாளாகும். இந்த நாளில் மிக முக்கியமான வழிபாடு ஒன்றை செய்து வந்தால் நமக்கு ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும். இந்த வழிபாட்டினை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

Advertisement

கார்த்திகை மாதம், இறைவனை ஜோதி வடிவமாக வழிபட வேண்டிய மாதமாகும். அதனால் தான் கார்த்திகை மாதத்தின் அனைத்து நாட்களும் காலை மற்றும் மாலையில் வீட்டின் நிலைவாசலுக்கு அருகே மண் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும் என்பார்கள். அது மட்டுமல்ல மகாவிஷ்ணு தூக்கத்தில் இருந்து கண் விழிக்கும் மாதமாகும். அப்போது நம்முடைய வீடுகளில் விளக்கேற்றி மங்கலகரமாக வைத்திருந்தால் பெருமாளின் அனுகிரகமும், மகாலட்சுமியின் அனுகிரகமும் கிடைக்கும். இதனால் நம்முடைய வீடும், வாழ்க்கையில் ஒளிமயமானதாக மாறும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை மாதம் முழுவதும் மாலையில் வீடுகளில் விளக்கேற்றுவதுடன், கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் காலை ஒரு சிறிய வழிபாட்டினை செய்வதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை முதல் தேதி நவம்பர் 16ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அதுவும் முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வருகிறது. கார்த்திகை முதல் நாள் கிருத்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வருவது மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் நம்முடைய பிரச்சனைகளுக்கு ஏற்ற முறையில் விளக்கேற்றினால் எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும்.

அருகில் இருக்கும் முருகன் அல்லது கோவிலில் இருக்கும் முருகன் சன்னதிக்கு சென்று இந்த வழிபாட்டினை செய்ய வேண்டும். இதற்காக வீட்டில் இருந்து நல்லெண்ணெய், பஞ்சு திரி ஆகிய அனைத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறேன் வேலை கிடைக்கவில்லை. அனைத்து பரிட்சைகளிலும் பாஸ் செய்தும், தகுதி இருந்தும் வேலை கிடைக்க மாட்டேன் என்கிறது என்பவர்கள் வேலை கிடைப்பதற்காக 3 அகல் விளக்குகள் எடுத்துச் சென்று முருகன் சன்னதியில் ஏற்றி விட்டு, முருகன் சன்னதி முன் அமர்ந்து மனதார வேலை வேண்டும் என்ற பிரார்த்தனையை மட்டும் முன் வைத்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

ஜாதகத்தில் ஏதாவது தோஷம், குறைகள் காரணமாக பெண்களுக்கு திருமண தடை இருந்தால், அந்த தடை நீங்க கார்த்திகை முதல் நாள் அன்று யாருக்கு திருமணமாக வேண்டுமோ அந்த பெண் அல்லது அவருக்கு பதில் அவரது தாயார் முருகன் சன்னதியில் ஒரே ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, 9 சுற்றுகள் சுற்றி வந்து முருகனை வழிபட்டு விட்டு, வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டுக்கு சென்று, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு, சிறிது நேரம் அமர்ந்த பிறகு மற்ற வேலைகளை பார்க்கலாம். ஆண்களுக்கு திருமண தடை இருந்தால் அது நீங்க, திருமணம் நடைபெற வேண்டிய பையன் அல்லது அவரது தாய் அல்லது தந்தை முருகன் கோவிலுக்கு சென்று, 5 அகல் விளக்கு ஏற்றி வைத்து, 9 சுற்று சுற்றி விட்டு வர வேண்டும்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்கிறவர்கள், குழந்தை பாக்கியம் பெறுவதற்காக கணவன்-மனைவி இருவரும் தம்பதிகளாக சென்று முருகன் சன்னதியில் 3 அகல் விளக்குகள் ஏற்றி, 6 சுற்றுகள் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து சுற்றி வர வேண்டும். இப்படி செய்து வழிபட்டால் அவர்களுக்கு முருகப் பெருமான் நிச்சயம் குழந்தை பாக்கியம் அருள்வார்.

பிரிந்த தம்பதி ஒன்று சேர, கணவன்-மனைவி பிரச்சனைகள் தீர வேண்டும், கணவர் பிரிந்து சென்று விட்டார். ஆனால் அவருடன் தான் வாழுவேன் என நினைக்கும் மனைவியாக இருந்தால் முருகன் கோவிலுக்கு சென்று 2 அகல் விளக்கு ஏற்றி வைத்து, 2 சுற்றுகள் சுற்றி வந்து, கணவரை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்கும் படி முருகனை மனதார வேண்டிக் கொண்டு, உண்டியல் அல்லது அர்ச்சகரின் தட்டில் ரூ.101 காணிக்கை செலுத்தி விட்டு வர வேண்டும். கருத்து வேறுதபாட்டால் மனைவி பிரிந்து சென்று விட்டார், அவர் திரும்பி வர வேண்டும் என்றால் கணவர், முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட வேண்டும். மனைவி மட்டும் பிரிந்து சென்றிருந்தால் ஒரு விளக்கும், குழந்தையுடன் சென்றிருந்தால் 3 விளக்குகள் ஏற்றி விட்டு, 5 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும்.

நீண்ட காலமாக முயற்சி செய்தும் சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை, கார் வாங்க முடியவில்லை, நிலம் அல்லது பொருள் வாங்க முடியவில்லை என வருத்தப்படுபவர்கள் கார்த்திகை முதல் நாளன்று முருகன் கோவிலுக்கு சென்று 3 அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, "ஓம் நமோ சரவண பவ" என்ற மந்திரத்தை சொல்லியபடி, 3 முறை சுற்று வந்து வழிபட வேண்டும்.

Readmore: நள்ளிரவில் பயங்கரம்!. தீவிபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பலி!. உ.பி.யில் சோகம்!

Tags :
Deepamkarthigai 1MahavishnuWishes will surely come true
Advertisement
Next Article