முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எங்கள் கொள்கை தலைவிக்கு இன்று பிறந்தநாள்..!! வேலுநாச்சியாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய்..!!

TVK Leader Vijay paid homage to Velunachiyar's portrait today, his birth anniversary.
11:57 AM Jan 03, 2025 IST | Chella
Advertisement

வேலுநாச்சியார் பிறந்த நாளான இன்று அவரது உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தி உள்ளார்.

Advertisement

இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி எனப் போற்றப்படும் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவப் படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டிற்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம். பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்" பதிவிட்டுள்ளார். முன்னதாக, மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி டிசம்பர் 25ஆம் தேதி அவரது உருவப்படத்திற்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Read More : காதல் ஜோடியை மிரட்டி பாலியல் சீண்டல்..!! கொள்ளையடித்த பணத்தில் பண்ணை வீடு..!! ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி பின்னணி..!!

Tags :
தமிழக வெற்றிக் கழகம்விஜய்வேலுநாச்சியார்
Advertisement
Next Article