For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று 6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்!! 58 தொகுதிகள்…! களத்தில் 889 வேட்பாளர்கள்!!

05:35 AM May 25, 2024 IST | Baskar
இன்று 6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்   58 தொகுதிகள்…  களத்தில் 889 வேட்பாளர்கள்
Advertisement

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆறாவது கட்ட தேர்தல் இன்று 8 மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 58 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

Advertisement

இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அடுத்து 2 கட்ட தேர்தல்கள் நடைபெற இருக்கிறது.ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது .இந்திய ஜனநாயகத்தின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற இருக்கிறது. ஏற்கனவே 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, ஏப்ரல் 13, மே 20ஆ தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து மே 25ஆம் தேதியான இன்று 6ஆம் கட்டத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் - பாஜக கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. நேற்று முன்தினம் இதற்கான பிரசாரம் ஓய்ந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

ஆறாம் கட்ட தேர்தலில் உத்தப்ரபிரதேச மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானா மாநிலத்தில் பத்து தொகுதிகளுக்கும், பீகார் மாநிலத்தில் எட்டு தொகுதிகளுக்கும், தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தில் உள்ள ஆறு தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் நான்கு ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்-ரஜோரி தொகுதியில் மூன்றாம் கட்டத்தின் போது வாக்குப்பதிவு நடைபெற இருந்தது இந்த நிலையில் அங்கு கடும் பனி பொழிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் ஆறாம் கட்ட தேர்தலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த தொகுதியில் மட்டும் 20 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அதேபோல மற்ற மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கும் 1900-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு பரிசீலனையில் 900 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் வாபஸ் பெற்றோர்களை தவிர்த்து களத்தில் தற்போது 889 வேட்பாளர்கள் நிற்கின்றனர்.

ஆறாம் கட்ட தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற தொகுதிகளாக டெல்லி, வடகிழக்கு டெல்லி, புதுடெல்லி , வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, வால்மீகி நகர், குருஷேத்ரா, பரிதாபாத், புவனேஸ்வர் அலகாபாத், விஷ்ணுபூர், சுல்தான் பூர் உள்ளிட்ட தொகுதிகள் இருக்கின்றன. மேலும் இந்த ஆறாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுமார் 40% பேர் கோடீஸ்வர வேட்பாளராக இருக்கின்றனர். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு 6.20 கோடியாக இருக்கிறது. அதிகபட்சமாக குருஷேக்ரா தொகுதியில் களமிறங்கும் பாஜக வேட்பாளரான நவீன் ஜிண்டாலின் சொத்து மதிப்பு 1,841 கோடியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து சந்துரூப் மிஸ்ரா ரூ.482 கோடியுடனும், சுசில் குப்தா 169 கோடியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். குறைந்த சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராக ரோஹ்டாக் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மாஸ்டர் ரஞ்சித் சிங் வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே தன்னிடம் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Read More: ஆன்லைன் காதல்.. ’46 வயது இளைய நபரை திருமணம் செய்த இங்கிலாந்து பெண்மணி..!’ டேட்டிங் ஆப் மோசடி குறித்து எச்சரிக்கை பதிவு!

Tags :
Advertisement