இன்னைக்கு சூரிய கிரகணம் மட்டும் இல்ல!… அபூர்வ பங்குனி அமாவாசை!… கண்டிப்பா செஞ்சுடுங்க!
Amavasai: பல ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனி மாத அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்படுவதால் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்பணம் செய்தால் பித்ரு சாபம் நீங்கும் என்பது ஐதீகம்.
பொதுவாக அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செய்யும் வழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவி வருகிறது. அமாவாசையன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) முதலானவற்றைத் தவறாது செய்யவேண்டும். அதனால் பித்ருக்களின் பசியும், தாகமும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். அதிலும் பங்குனி மாதம் வரும் அமாவாசை அன்று விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு இன்றுகாலை (ஏப்.8) பங்குனி அமாவாசை திதி தொடங்குகிறது. அபூர்வமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனி மாத அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்படுகிறது. மேலும் பங்குனி மாத அமாவாசை திங்கள் கிழமை அன்று வருவதால் இது மிக விசேஷமான சோமவதி அமாவாசை, பூதாதி அமாவாசை அல்லது சோமவார அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு 2.54 மணிக்கு தொடங்கிய அமாவாசை நாளை 12.28 AM மணியுடன் முடிவடைகிறது. அமாவாசை தேதி நாள் முழுவதும் நீடித்தால் கூட, மதிய நேரத்திற்குள் தர்ப்பணம் செய்வது உகந்தது. அதேபோல, மதியம் 12 மணிக்கு மேல் சூரிய கிரகணம் ஏற்பட இருக்கிறது. எனவே மதியம் 12 மணிக்குள் பங்குனி அமாவாசைக்கான தர்ப்பணத்தை செய்து முடிக்கலாம்.
அன்று அதிகாலையில் குளித்து முடித்து, ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைக்க வேண்டும்.
யாசகர்களுக்கு அன்னதானம் செய்யலாம். குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்கள் இன்று விரதம் இருந்து அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட நிச்சயம் புத்திர பாக்கியம் கிடைக்கும். எனவே பங்குனி அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபடுங்கள். முன்னோர்களை தவறாமல் வழிபட்டுவந்தால்தான் குலதெய்வமே குளிர்ந்து போவார்கள், அருளுவார்கள் என்பது ஐதீகம்.
Readmore: ஓபிஎஸுக்கு இன்று சம்பவம் இருக்கு!… சொத்து குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை!