இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்!… இதன் நோக்கம், முக்கியத்துவம் என்ன?
National Panchayati Raj Day 2024:ஒரு நாட்டில் மக்களின் நலன் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்குச் சீரான அரசியல் அதிகாரமும் முக்கியமாகும். இந்த அரசியல் அதிகாரங்களானது பகிர்ந்து அளிக்கப்படும் போதுதான் மக்களுக்கான தேவைகள் அனைத்தும் எளிதாக நிறைவேறும். அப்படிப்பட்ட அதிகார பகிர்வு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்டம். இந்த பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை மறைந்த முன்னாள் இந்தியாவின் பிரதமர் ராஜீவ்காந்தி கொண்டு வந்துள்ளார்.
இந்தச் சட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே அதிகாரத்தைப் பரவலாகக் கொடுப்பதுதான். மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிகவும் வலிமையானவை ஆகும். இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் நிர்வாகம் செய்யும் உரிமையை இந்த திட்டத்தின் மூலம் பெறுகிறார். பஞ்சாயத்து நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை இதன் மூலம் பெறுகிறார்கள்.
நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அரசு அதிகாரத்தை பகிர்தலுக்குப் பஞ்சாயத்து அமைப்புகளைப் பரவலாக்குவது இதன் நோக்கமாகும். கிராம அளவில் மக்கள் தங்களின் நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமையை வார்த்தை அளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டி உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அதிகாரத்தைக் குறைத்துக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. இப்படிப் பகிரப்பட்ட காரணத்தினால் தான் அரசியல் நிர்வாகமானது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே இந்த பஞ்சாயத்து ராஜ் தினம் ஆண்டுதோறும் மார்ச் 24ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் தான் சிறந்த பஞ்சாயத்துத் தலைவருக்கான விருதும் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு 31 ஆவது தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது.