For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று மார்கழி அமாவாசை..!! வீட்டு வாசலில் யாரும் கோலம் போடாதீங்க..!! ஏன் தெரியுமா..?

The scriptures say that certain things should not be done on the new moon day.
07:41 AM Dec 30, 2024 IST | Chella
இன்று மார்கழி அமாவாசை     வீட்டு வாசலில் யாரும் கோலம் போடாதீங்க     ஏன் தெரியுமா
Advertisement

இன்று மார்கழி மாத அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. மார்கழி மாத அமாவாசை தினத்தில் மூல நட்சத்திரத்தில் தான் அனுமன் பிறந்தார். இந்த தினத்தில் நாம் சில விஷயங்களை சரியாக செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால், தவறாக ஒரு சில விஷயங்களை செய்யவே கூடாது. அது எதிர்மறையாக சென்றுவிடும். அமாவாசை தினத்தில் விரதம் இருந்து, படைத்து, எள் தண்ணீர் இறைப்பது நமது பித்ருக்களை திருப்திபடுத்தும். ஆனால், அமாவாசை தினத்தில் சில காரியங்களைச் செய்யக் கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Advertisement

மாதத்தின் அனைத்து நாட்களுமே அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து, வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை என்றாலும் கூட, அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து காகங்களுக்கு அன்னமிட்ட பின் வாசலில் கோலமிடுவது தவறில்லை. அல்லது அன்றைய தினம் முழுவதுமே வாசலில் கோலம் போடாமல் இருக்கலாம்.

விநாயகர் சதுர்த்தி, முருகனுக்கு சஷ்டி. பெருமாளுக்கு ஏகாதசி, பைரவருக்கு அஷ்டமி, பௌர்ணமிக்கு அம்பிகை. இதைப் போலவே, பித்ருக்களுக்கு அமாவாசை. அதனால் தான் தினமும் இல்லாவிட்டாலும், அமாவாசை தினத்தில் திதியில் மட்டுமாவது தான தருமங்களைச் செய்ய வேண்டும். அமாவாசையில் செய்கின்ற தர்ப்பணம் மற்றும் தானங்களால் முன்னோர்களின் தாகமும், பசியும் நிவர்த்தியாவதுடன் குலம் செழிக்கும்.

நம் இருப்பிடத்தைத் தேடி வரும் முன்னோர்கள் பசி, தாகம் தீர எள்ளு கலந்த நீரினால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது அதை ஏற்றுக்கொண்டு நம்மை ஆசிர்வதிப்பார்கள். அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடுவது, மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி இவற்றால் பித்ருக்களின் வருகை தடைபடும். இதனால், தர்ப்பணம் முடிந்து காகத்திற்கு அன்னமிடும் வரை அதாவது வீட்டுக்கு பித்ருக்கள் வந்து செல்லும் வரை, வீட்டு வாசல் மற்றும் பூஜை அறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்பி பூஜைகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read More : பெற்றோர்களே..!! உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சா..? நாளையே கடைசி..!! இலவசம் தான்..!! மறந்துறாதீங்க..!!

Tags :
Advertisement