For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று சர்வதேச குழந்தைகள் தினம்!. வித்தியாசமாக கொண்டாடும் நாடுகள்!

Today is International Children's Day! Countries that celebrate differently!
08:42 AM Nov 20, 2024 IST | Kokila
இன்று சர்வதேச குழந்தைகள் தினம்   வித்தியாசமாக கொண்டாடும் நாடுகள்
Advertisement

International Children's Day: உலகில் ஏறத்தாழ 85 நாடுகளில் குழந்தைகள் தினம் வெவ்வேறு தினங்களில் பிரத்தியேகமாகக் கொண்டாடப் படுகின்றது. நவம்பர் 14, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் குழந்தைகள் தினமானது வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டாலும், சர்வதேச குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20-ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Advertisement

1954-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி, ஐக்கிய நாடுகள் சபை, குழந்தைகளுக்கிடையேயான சகோதரத்துவம் மற்றும் புரிதலை மேம்படுத்தும் வகையிலும் குழந்தைகளின் நலனுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒன்றை கடைபிடிக்குமாறு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது. 1959-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான பிரகடனம் செய்த நாள் மற்றும் 1989-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான மாநாடு நடத்தப்பட்ட நாளான நவம்பர் 20-ந்தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.

குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தவும், துஷ்பிரயோகம், சுரண்டல், பாகுபாடு போன்ற வடிவங்களில் வன்முறையை அனுபவிக்கும் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொழிலாளர்களாக தள்ளப்படும் குழந்தைகளை மீட்டெடுக்கவும் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், உலக நாடுகளில் எல்லாம் குழந்தைகள் தினம் எதற்காக, எப்படிக் கொண்டாடப்படுகிறது, என்பது குறித்து சுவாரஸியமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியா: நவம்பர் 14, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் என்றாலே அனைவரும் நினைவலை ரயிலேறி பள்ளி நாள்களுக்குச் சென்றுவிடுகிறோம். அன்று மட்டும் சீருடை தவிர்த்து கலர் உடை அணியலாம், பள்ளியில் இனிப்பு வழங்கப்படும். நேரு மாமா புகழ் பாடும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும், சில பள்ளிகளில் எல்லாம் ஆசிரியர்கள் ஆடிப் பாடி கலைநிகழ்ச்சிகள் நடத்துவர். பெரிதாக வகுப்புகள் நடக்காது, வாழ்த்து ஒலிகளால் அன்றைய தினம் முழுவதும் நிறைந்திருக்கும்.

பல்கேரியா: ஜூன் மாதம் 1-ம் தேதி இங்கு குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு விழிப்பு உணர்வுக்காகக் குழந்தைகள் தினத்தன்று வாகனங்களில் விளக்குகளைப் பகலிலும் எரியவிட்டுக்கொண்டே வண்டி ஓட்டுவது இங்கு வழக்கம்.

டொக்லியு தீவுகள்: அக்டோபர் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தன்று, இங்கு குழந்தைகள் வெள்ளை உடை அணிவது வழக்கம். மற்றொரு சிறப்பம்சமாக அன்று முழுவதும் குழந்தைகளுக்குப் பெற்றோர் சேவை செய்து மகிழ்கின்றனர். "அப்பா அதை எடுங்க, அம்மா இதைப் பிடிங்க" என்று பெற்றோரை வேலை வாங்குவது குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான்.

சிலி: பொம்மைகள் வாங்குவதற்கு என்றே ஒரு நாள் இருந்தால் எப்படி இருக்கும்? சிலியில் குழந்தைகள் தினத்தன்று குட்டீஸ் விரும்பும் பொம்மைகள் வாங்கித் தருவதையே கொண்டாட்டமாக வைத்திருக்கின்றனர். இங்கு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது குழந்தைகள் தினம்.

கனடா: நவம்பர் 20, குழந்தைகள் நலத்தைப் பற்றிய சட்டங்களைப் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் அவர்கள் முன்னேற்றத்துக்கு உகந்த சட்ட வரைவுகளை அறிமுகம் செய்யும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

எகிப்து: நவம்பர் 20, எகிப்தில் இது பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது, தெருக்களில் எல்லாம் அலங்கரிக்கப்பட்டு, ஆங்காங்கே நாட்டுப்புற நடனங்கள், காலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் என விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஜப்பான்: இதிலும் ஜப்பானியர்கள் வித்தியாசம்தான். ஜப்பானில் மட்டும் இரண்டு குழந்தைகள் தினங்கள் கொண்டாடப்படுகின்றன. மார்ச் 3, பெண் குழந்தைகளுக்காகவும் மே 5, ஆண் குழந்தைகளுக்காகவும் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகள் தினத்தன்று மக்கள் ஹெய்ன் வகை பொம்மைகளால் வீடுகளை அலங்கரித்து கொண்டாடுகின்றனர். ஆண் குழந்தைகள் தினத்தன்று மீன் வடிவப் பட்டங்களைப் பறக்க விட்டு கொண்டாடுகின்றனர்.

மெக்ஸிகோ: மெக்ஸிகோவில் ஏப்ரல் 30-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பள்ளிகளில் எல்லாம் ஒரே விளையாட்டு மயமாகவே இருக்கும். மேலும் மெக்ஸிகோவின் சிறப்பு குழந்தைகள் தினத்தன்று மிக அடர்த்தியான வண்ணங்களில் குழந்தைகள் ஆடை அணிவது ஆகும். வசந்த காலத்தை, புது தொடக்கத்தை அனுசரிப்பதற்காக இது செய்யப்படுகிறது.

பராகுவே: குழந்தைகள் தினத்தைப் பொறுத்தவரை மிக வித்தியாசமாக, கொண்டாட்டமாக இல்லாமல் நினைவு அஞ்சலி செலுத்தும் நாளாக இங்கு கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 16-ம் தேதி, 'அகோஸ்டா நு' (Battle of Acosta Ñu) என்னும் போரின்போது 20,000 வீரர்களை எதிர்த்து 6 - 15 வயது சிறுவர்கள் 3,500 பேர் போரிட்டதை நினைவுகூரும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பெரு: இங்குக் குழந்தைகளின் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது வர்த்தக நிறுவனங்கள். அனைத்துக் கடைகளிலும் நமது ஆடி மாதம்போல சிறப்புச் சலுகைகளும் தள்ளுபடி விலைகளும் இன்று கொடுக்கப்படுகிறது. பெரு நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகள் தினம் ஷாப்பிங் தினமாகவே கொண்டாடப்படுகிறது என்று சொல்லலாம்.

Readmore: ஜாக்கிரதை!. ‘குளிர்காலத்தில் ஆண்குறி அளவு 50% வரை சுருங்கிவிடும்’!. மருத்துவர்கள் எச்சரிக்கை!.

Tags :
Advertisement