For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று ஆடி மாத தேய்பிறை பிரதோஷம்..!! இந்த வழிபாட்டை மறக்காதீங்க..!! சரியான நேரம் இதுதான்..!!

Today is the Pradosha day of Aadi month. Pradosha periods are very powerful periods. Your prayers and the mantras you chant will have immense power.
10:07 AM Aug 01, 2024 IST | Chella
இன்று ஆடி மாத தேய்பிறை பிரதோஷம்     இந்த வழிபாட்டை மறக்காதீங்க     சரியான நேரம் இதுதான்
Advertisement

இன்று ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினம். பிரதோஷ காலங்கள் என்பது மிக சக்தி வாய்ந்த காலங்கள். உங்கள் வேண்டுதல்களுக்கும், நீங்கள் உச்சரிக்கும் மந்திரங்களுக்கும் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இன்றைய பிரதோஷம் மிக விசேஷமானது. ஒவ்வொரு மாதத்திலும் தேய்பிறை மற்றும் வளர்பிறை என 2 பிரதோஷங்கள் வரும். அனைத்து பிரதோஷங்களுமே சிறப்பு வாய்ந்தவை என்றாலும், வியாழக்கிழமை வரும் பிரதோஷம் சனிக்கிழமையைப் போலவே சக்தி வாய்ந்தது.

Advertisement

மனிதனின் பிறவி தோஷங்களை போக்குவது பிரதோஷம். பிரதோஷ நாள் மட்டுமல்ல எல்லா நாட்களிலும், நேரங்களிலும் சிவபெருமானை வழிபடுவதற்கும் இந்த பிரதோஷ நேர வழிபாடு சிறப்பு வாய்ந்தது. இந்த பிரதோஷங்கள் எந்தெந்த கிழமைகளில் வருகிறதோ அந்த கிழமைகளுக்குரிய நவக்கிரக நாயகர்களின் அருளும் அன்றைய தினத்தில் நமக்கு கிடைக்கிறது. வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷம் "வியாழப்பிரதோஷம்" எனப்படுகிறது.

இந்த நாளில் வரும் பிரதோஷ தினத்தில் சிவ பெருமானை கோவிலுக்கு சென்று வணங்குவதால் நவக்கிரகங்களில் முழு சுபகிரகமான "குரு பகவானின்" அருளும் சேர்த்து கிடைக்கப் பெறலாம் என்பது ஐதிகம். வியாழன் பிரதோஷங்கள் வருகிற போது ஜாதகத்தில் குரு பகவானின் கோட்சாரம் சரியில்லாதவர்கள், குரு திசை நடப்பவர்கள், குரு பகவான் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இன்றைய தினம் பிரதோஷ வழிபாடு செய்தால், வாழ்வில் மேன்மையான இடத்தை அடையலாம்.

பிரதோஷ நேரமான மாலை 4.30 மணியில் இருந்து 6.00 மணிக்குள்ளாக சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதிகளில், மஞ்சள் நிறப்பூக்களை வைத்து, 27 வெள்ளை கொண்டைக்கடலைகளை நிவேதனம் செய்து வணங்க வேண்டும். நந்தி பகவான் சிவபெருமான் அம்பிகை மற்றும் தட்சிணாமூர்த்தியை வணங்கிட பொருளாதார பிரச்சனைகள், திருமண தடை, புத்திர பேறு என அனைத்து தடைகளும் விலகி வாழ்வில் வளம் பெறலாம்.

Read More : 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை..!! நீர்வரத்து 1.70 லட்சம் கன அடியாக அதிகரிப்பு..!!

Tags :
Advertisement