For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விட்டாச்சு லீவ்...! கடலூரில் இன்று பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை...!

05:24 AM Jan 08, 2024 IST | 1newsnationuser2
விட்டாச்சு லீவ்     கடலூரில் இன்று பள்ளி   கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement

கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

Tags :
Advertisement