சற்றுமுன்...! சென்னை உள்ளிட்ட 3 மாவட்டத்தில் இன்று அரசு பள்ளிகளுக்கு லீவ்...! முழு விவரம்
சென்னை உள்ளிட்ட 3 மாவட்டத்தில் இன்று அரசுப் பள்ளிகள் இயங்காது என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளனர்
சென்னையில் இன்று அரசுப் பள்ளிகள் இயங்காது என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளனர். அதே போல, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. என்.எம்.எம்.எஸ். எனப்படும் தேசிய வருவாய் தேர்வுப் பணிகளுக்கு ஆசிரியர்கள் செல்வதால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது . இன்றைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 10-ஆம் தேதி அன்று பள்ளிகள் இயங்கும் என கல்வி அலுவலர் அறிவித்துள்ளனர்.
அதே போல, திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், திருவண்ணாமலை மாவட்ட கல்வி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளும் இன்று பள்ளி வேலை நாளாக செயல்படும். மேலும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு (NMMS ) இன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தேர்வுக்கு மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருவது சம்பந்தமாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.