For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜாலி...! கனமழை எதிரொலி... இன்று 5 மாவட்டத்தில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை...!

Today in Kerala, 5 districts have declared a school holiday due to heavy rains.
06:10 AM Jul 15, 2024 IST | Vignesh
ஜாலி     கனமழை எதிரொலி    இன்று 5 மாவட்டத்தில் பள்ளி  amp  கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement

கேரளாவில் இன்று 5 மாவட்டத்தில் பள்ளி மற்றும் கனமழைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர், மலப்புரம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழைக்கான வாய்ப்புள்ளதால் அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கேரளாவின் வடக்கு கடற்கரை முதல் தெற்கு கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, பாலக்காடு, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது. இதனால் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.

கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11.30 மணி வரை கேரள மற்றம் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அப்போது ராட்சத அலைகள் வீசக் கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :
Advertisement