முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்று 2,000 இடங்களில்..!! மருத்துவ முகாம், முதல்வர் காப்பீடு திட்ட முகாம்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

07:13 AM Dec 02, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் பலர் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மழைகாலங்களில் பரவக்கூடிய மலேரியா, டெங்கு, டைபாய்டு போன்ற காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அரசு தரப்பில், அனைத்து மாவட்டங்களிலும், தூய்மை பணியாளர்கள் கொசுவை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு, ஒவ்வொரு வீடுகளிலும் கொசு உருவாகாத வண்ணம் நடவடிக்கைக எடுத்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னை மாநகராட்சியில் 100 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இன்று விரிவான மருத்துவ காப்பீடு முகாமும் நடைபெற உள்ளது. அதன்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் 100 இடங்களில் நடைபெற உள்ளது. விரிவான மருத்துவ காப்பீட்டு முகாம் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. சென்னையில் ராயபுரம், அடையார், மயிலாப்பூர், அயனாவரம், நீலாங்கரை உள்ளிட்டு 5 இடங்களில் காப்பீடு முகாம் நடைபெறுகிறது. புதிதாக திருமணமானவர்கள், விடுபட்டவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

Tags :
மருத்துவ காப்பீடு திட்டம்மருத்துவ முகாம்மழைக்காலம்
Advertisement
Next Article