For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Today Gold Rate: சரசரவென குறைந்த விலை..! தங்கம் வாங்க இதுவே சரியான தருணம்..! முழு விவரம்…

10:03 AM Apr 22, 2024 IST | Kathir
today gold rate  சரசரவென குறைந்த விலை    தங்கம் வாங்க இதுவே சரியான தருணம்    முழு விவரம்…
Advertisement

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

Advertisement

நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 55,080ஆக இருந்த நிலையில், இன்றைய தினம் (ஏப்ரல் 22) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ. 6,845க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது, இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்நத 5 நாட்களாக மாற்றமின்றி காணப்பட்ட வெள்ளியின் விலை தற்போது குறைந்துள்ளது.ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து 89 ரூபாய்க்கும், 1கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 குறைந்து ரூ.89,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement