For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Today Gold Rate : நெருங்கும் தீபாவளி பண்டிகை.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! - இதுதான் இன்றைய விலை..

Diwali festival is approaching.. Gold price is drastically low..!! - This is today's price..
12:26 PM Oct 15, 2024 IST | Mari Thangam
today gold rate   நெருங்கும் தீபாவளி பண்டிகை   அதிரடியாக குறைந்த தங்கம் விலை       இதுதான் இன்றைய விலை
Advertisement

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

Advertisement

அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது. ஆனால் தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.  தங்கம் விலை தொடர் உயர்வை கண்டு வந்த நிலையில், 2 நாட்களாக சற்று குறைந்ததால் இல்லத்தரசிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆறுதல் அளித்தது.

அதன்படி நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7115 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ. 56,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று கிராமுக்கு 20 குறைந்து ரூ.7095 க்கும், ஒரு சவரன் 56,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 18 காரட் தங்கம் ஆபரணத்தின் விலை கிராமுக்கு ரூ.5,885 க்கும், சவரன் ரூ.47,080 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5820 க்கும், ஒரு சவரன் ரூ.46,560 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை நிலவரம் பொறுத்த வரையிலும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.103 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,300 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; இரவில் பிரா அணிந்து தூங்குவதால் மார்பக புற்றுநோய் வருமா..? பெண்களே இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement