முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பு...! இன்று காலை 10 மணிக்கு... மீண்டும் அதிமுக சார்பில் திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...! எடப்பாடி அதிரடி

Today at 10 am... AIADMK will once again protest against DMK
05:52 AM Dec 27, 2024 IST | Vignesh
Advertisement

திமுக அரசை கண்டித்து சென்னையில் இன்று அதிமுக பொதுச் சயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தலைநகரின் மையத்தில் உள்ள, மாநிலத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. படிப்பு, பணியிடங்களில்கூட பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.

Advertisement

திமுக ஆட்சியில், பல்வேறு மாவட்டங்களிலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம்புரிவது வாடிக்கையாக இருக்கிறது. 6 வயது சிறுமி முதல் 60 வயதை கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.

காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், பாலியல் குற்றங்களை தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுக்கவும், காவல் துறைக்கு இன்றுவரை முழு சுதந்திரம் வழங்கவில்லை. திமுக ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை. இத்தகைய கொடுங்கோல் ஆட்சி நடத்தும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெண்களுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக ஆட்சியை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் கட்சி ரீதியான மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Tags :
edappadi palaniswamimk stalinProtestTamilnadutn governmentசென்னைதமிழ்நாடு
Advertisement
Next Article