இன்றும், நாளையும் ஆவின் பால் தடையின்றி கிடைக்கும்...! அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி நடவடிக்கை...!
இன்றும், நாளையும் ஆவின் பால் தடையின்றி கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நாளை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து ஐந்தாம் தேதி ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலானது கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் முடங்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனை சரி செய்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. அந்த வகையில் மிக அத்தியாவசிய தேவையான பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னையில் ஆவின் பால் தங்கு தடை இன்றி கிடைக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை, நாளை மறுநாள் ஆவின் பால் தடையின்றி கிடைக்கும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார் .
மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையம், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு மற்றும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து 24X7 மணி நேரமும் பணியாற்றிட முறைப்பணி முறையில் உதவி செயற் பொறியாளர்கள்/உதவி பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.