முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்று மற்றும் நாளை... தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில்...! இதை கட்டாயம் செய்ய வேண்டும்...!

06:20 AM Jan 09, 2024 IST | 1newsnationuser2
Advertisement

அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தன்சுத்தம், பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தினை உணர்தல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் நடவடிக்கைகள், பள்ளி காய்கறித் தோட்டம் அமைத்தல் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இத்திட்டத்தின் சிறப்பு செயல்பாடாக ஜனவரி மாதத்தில் இன்று மற்றும் நாளை வரை சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் மன்றம் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் பள்ளி வளாகத்தில் பின்வரும் தூய்மைப் பணி நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பள்ளிவளாகம் மற்றும் வகுப்பறைத் தூய்மை அனைத்து வகுப்பறைகளையும் தூய்மை செய்து கரும்பலகை பயன்படுத்தும் வண்ணம் இருப்பதை உறுதி செய்தல், ஆசிரியர் அறைகள், ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் உட்பட்ட இதர அறைகளில் தேக்கமடைந்துள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை கழிவகற்றம் செய்தல். பள்ளி அலுவலகம் மற்றும் தலைமையாசிரியர் அறையை முழுமையாக தூய்மை செய்தல். புதர்கள் மற்றும் களைச் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் பிற அறைகளில் உள்ள தளவாட பொருட்கள் கதவு மற்றும் ஜன்னல்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்தல்.

காலை / மதிய உணவு திட்டத்திற்கான சமையல் அறை நன்கு சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன், சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டு பயன்படுத்துதல் மற்றும் மாணவர்கள் உணவருந்தும் இடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுதல். பள்ளி வளாகத்தில் நீர் தேங்காவண்ணம் சுற்றுப்புறம் மேடு பள்ளம் இன்றி சமப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளல். அனைத்து வகுப்றைகளும் சுத்தம் செய்து, நன்றாக நீரால் தூய்மை செய்து பள்ளியில் உள்ள கட்டிடங்களும் வளாகமும் தூய்மையாக மிளிரச் செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத்தில் சேரும் குப்பைகளை எக்காரணம் கொண்டும் எரித்தல் கூடாது. பள்ளி வளாகத்தில் சேரும் தேவையற்ற குப்பைகளை மேலாண்மை செய்தல். மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை இனம் பிரித்தல் மற்றும் மறுசுழற்சிக்காக உள்ளூர் நிர்வாகத்திடம் திடக் கழிவுகளை ஒப்படைத்தல். தாழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளை முறையாக தூய்மை செய்து பாதுகாப்பான முறையில் பயன்படுத்திட வேண்டும்.

Tags :
cleaningschoolteacherstn government
Advertisement
Next Article