சூடான் உள்நாட்டுப் போர் : குழந்தைகளின் பசியை போக்க பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் தாய்மார்கள்..!! - அகதிகள் முகாமில் பெண்களின் கண்ணீர் கதை..
சூடானில் நிலவும் உள் நாட்டுப் போர் காரணமாக அங்கு இளம் பெண்களும் , கர்ப்பிணி பெண்களும் தீவிர நெருக்கடியில் சிக்கி உள்ளனர். ஏப்ரல் 25, 2003 அன்று சூடானில் டார்ஃபர் மோதல் ஏற்பட்டதில் சூடான் விடுதலை இயக்கம் சூடான் ராணுவப் படைகளைத் தாக்கியதில் இருந்து அந்நாட்டின் அரசியல் நிலப்பரப்பிற்குள் அதிகாரப் போராட்டம் நடந்து வருகிறது. கண்மூடித்தனமான ஆயுத தாக்குதல்களால் அங்கு பொது மக்கள் நீண்டகாலமாகவே சிக்கியுள்ளனர். குறிப்பாக பெண்கள் பெரும் துன்பத்தை எதிர் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சூடானில் சமீபத்தில் வெடித்துள்ள உள்நாட்டுப் போரால் இளம் பெண்களும், தாய்மார்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். 27 வயதான பெண் ஒருவர் சூடானின் மிருகத்தனமான உள்நாட்டுப் போரில் இருந்து தப்பி, சாட் நாட்டில் உள்ள ஒரு முகாமில் தஞ்சம் புகுந்துள்ளார். சூடான் நாட்டு போரினால் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையால், பாலியல் சுரண்டலுக்கு ஆளானதாகவும், அதன் விளைவாக தனது குழந்தை பிறந்ததாக அந்த பெண் வேதனையுடன் தெரிவித்தார்.
அந்த பெண் கூறுகையில், அகதிகள் முகாமில் உள்ள பல பெண்கள் மற்றும் சிறுமிகள் உள்ளூர் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களால் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதை ஒப்புக்கொண்டுள்ளனர். பசி மற்றும் வறுமையால் உந்தப்பட்ட பெண்கள், பணத்துக்காகவோ உதவிக்காகவோ தங்கள் கண்ணியத்தை விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு உணவு இல்லாமல் போனபோது, உதவியாளரிடம் உதவி கேட்டுள்ளார். அந்தத் தொழிலாளி ஒவ்வொரு முறையும் பாலியல் உறவுகளுக்கு ஈடாக சுமார் 1,000 டாக்காக்களைக் கொடுத்தார். பிரசவித்த பிறகு, உதவி பணியாளர் அந்த பெண்ணை கைவிட்டுள்ளான்.
அகதிப் பெண்களின் மிகப் பெரிய விருப்பம் வேலைவாய்ப்பையும் கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் பெற வேண்டும் என்பதுதான். போரில் தனது குடும்பத்தை இழந்த 19 வயது சிறுமி, எங்களிடம் போதுமான வளங்கள் இருந்தால், நாங்கள் எங்கள் மானத்தை தியாகம் செய்ய வேண்டியதில்லை என்று கூறினார்.
உளவியலாளர் டார்-அல்-சலாம் உமர் கூறுகையில், சில பெண்கள் கர்ப்பமாகிவிட்டதாகவும், சமூக இழிவுகளுக்கு பயந்து, அவர்களது கர்ப்பத்தை கலைக்க முடியவில்லை. இந்தப் பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கணவன் இல்லாமல் கருத்தரிப்பது அவர்களுக்கு இன்னும் பெரிய அதிர்ச்சியாகும். இருப்பினும், பல மனிதாபிமான அமைப்புகள் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுகின்றன என்றார்.
Read more ; திருமணத்திற்கு முன் ஜாதகம் மட்டும் இல்ல.. மணமக்களுக்கு இந்த மருத்துவ பரிசோதனைகளும் அவசியம்..!!