For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரத்தம் தெறிக்க..! வெளியானது "சலார்" படத்தின் தமிழ் ட்ரைலர்..!

08:23 PM Dec 01, 2023 IST | 1Newsnation_Admin
ரத்தம் தெறிக்க    வெளியானது  சலார்  படத்தின் தமிழ் ட்ரைலர்
Advertisement

இயக்குனர் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் சலார் பாகுபலிக்கு பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நடிகர் பிரபாஸ் சலார் படத்தில் வெற்றி இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இணைகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Advertisement

இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் இதில், ஜெகபதி பாபு, ப்ரித்விராஜ், ஈஸ்வரி ராவ், டின்னு ஆனந்த், பாபி சிம்ஹா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிராமநாதமாக் உருவாக்கி வரும் இந்த படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே தேதியில் ஷாருக்கானின் டுங்கி படமும் வெளியாகிறது. இயக்குனர் பிரசாந்த் நீலும் ஷாருக்கானும் மோதுவது முதல் முறை கிடையாது. கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த கேஜிஎஃப் படத்தின் முதல் பாகமும், ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜீரோ திரைப்படம்மும் ஒரே நாள் வெளியாகியாது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 7.19 மணியளவில் ‘சலார்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி மிரட்டலான ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதலில் தெலுங்குவில் வெளியானது அதன் பிறகு, மலையாளம், கன்னடா, தமிழ் மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சுமார் 3 நிமிடம் 46 வினாடிகள் இருக்கும் இந்த ட்ரைலர் கேஜிஎப் படத்தில் நடிகர் யாஷிற்கு பதில் பிரபாஸ் இருப்பதை போல் காட்டுகிறது. மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அமைந்திருக்கும் இந்த ட்ரைலர், படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது.

Tags :
Advertisement