முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகத்தில் பரவிய குரங்கு அம்மை? எல்லையில் தீவிர சோதனை..!! உஷார் மக்களே..

To prevent the spread of Mpox disease, the health department has taken preventive measures in the border areas of Tamil Nadu - Kerala state.
02:06 PM Sep 19, 2024 IST | Mari Thangam
Advertisement

குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 524 இறப்புகள் பதிவாகியுள்ளது. இதில் 96% பாதிப்புகள் மற்றும் இறப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தத அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பலத்த சோதனைகளுக்கு பின்னரே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு துபாய் சென்று வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறி ஏற்பட்டுள்ளது. முதலில் அதிக காய்ச்சல் காரணமாக மஞ்சேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞரின் மாதிரிகள் பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானது. எடவண்ணா பகுதியை சேர்ந்த 38 வயது நபர், மஞ்சேசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, தமிழக எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Mpox நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக – கேரள மாநில எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். நிபா வைரஸ் மற்றும் குரங்கம்மை தொற்று எதிரொலியாக, தமிழக எல்லைப் பகுதியில் கேரளத்திலிருந்து வரும் கார், வேன், சுற்றுலா பேருந்துகள் உள்ளிட்ட பெரும்பாலான வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

Read more ; ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு..!! கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெற்றோர்..

Tags :
health departmentMPOXTamil Nadu - Kerala border
Advertisement
Next Article