உங்களுக்கு ஜென்ம சாபம் இருக்கா.? விடுபட வேண்டுமா.? சித்தர்களால் கூறப்பட்ட எளிய பரிகாரம் இதோ.!
துன்பத்திலும் வேதனையிலும் இருக்கும் ஒரு ஒரு மனிதனின் வயிற்றெரிச்சல் வார்த்தைகளாக வரும்போது அதுவே சாபமாகிறது. சாஸ்திரங்களின்படி பத்து வகையான சாபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை பெண் சாபம் பிரேத சாபம் பிரம்ம சாபம் சர்ப்ப சாபம் பூமி சாபம் கங்கா சாபம் என இந்த சாபங்களை வகைப்படுத்துகின்றனர். எதை வாங்கினாலும் கொடுத்தாலும் ஒருவரிடம் இருந்து வாங்க கூடாததும் ஒருவருக்கு கொடுக்கக் கூடாதும் சாபமாகும். சில நேரங்களில் பெற்றோருக்கும் வீட்டில் இருந்து முதியவர்களுக்கும் செய்யும் வேலைகளை தட்டிக் கழிப்பதும் சாபமாகும். மேலும் திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் இருப்பதும் சாபத்தில் சேரும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவருக்கு நாம் கொடுக்கும் சாபம் அல்லது ஒருவர் நமக்கு கொடுக்கும் சாபம் ஜென்மமாக தொடரும் என நம்பப்படுகிறது. இத்தகைய ஜாதகத்தில் இருந்து விடுபடுவதற்கு என்று ஒரு எளிமையான பரிகாரம் ஒன்று இருக்கிறது . இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்றும் இந்த பரிகாரங்கள் செய்வதற்குரிய நாட்கள் எவை என்றும் இந்த பதிவில் பார்ப்போம். இந்த சாபத்தை முறிக்கும் பரிகாரம் பண்டைய காலங்களில் சித்தர்களால் கூறப்பட்டதாகும். இந்தப் பரிகாரம் செய்வதற்கு கருஞ்சீரக எண்ணையை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றுடன் சேர்த்து வெட்டிவேர் வாங்கிக் கொள்ள வேண்டும்.
கருஞ்சீரக எண்ணையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அவற்றுடன் வெட்டி வேர் சேர்த்து லேசாக சூடு பண்ணி கொள்ளவும். பின்னர் இதனை ஆற வைக்க வேண்டும். சூடு நன்றாக ஆறியதும் இந்த எண்ணெயை எடுத்து காதுகளில் தடவிக்கொள்ள வேண்டும். இவற்றை காது ஓட்டைகளில் தடவ வேண்டும் என்று அவசியம் இல்லை. காதுகளில் மற்ற இடங்களில் தடவிக் கொள்ள வேண்டும். இவற்றை அஷ்டமி, நவமி தினங்களில் எம்பெருமானை வேண்டிக் கொண்டு இந்த சாபத்திலிருந்து விடுபட சில சில என்று பிரார்த்தித்துக் கொண்டே தடவ வேண்டும். இவ்வாறு தடவி வர சாபங்கள் நீங்கும்.