ஒத்த செடி போதும்.! ஓஹோன்னு வாழ்க்கை மாறும்.! செல்வ வளம் பெருக கருவேப்பிலை செடி எங்கு வைக்க வேண்டும்.?
நாம் அனைவரும் வீட்டை அழகு படுத்துவதிலும் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துவோம். வீட்டை அழகாக வைப்பதற்காக பூச்செடிகள் மற்றும் மரங்களை வளர்ப்போம். பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு பயன்படும் காய்கறிகளையே செடியாக வளர்ப்பார்கள். இதன் மூலம் அவற்றில் இருந்து வரும் காய்கறிகளைக் கொண்டு அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் நம் வீட்டில் வளர்க்கும் செடிகள் வாஸ்து படி அமைந்திருக்க வேண்டும் என வாஸ்து கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் வளர்க்கப்படும் செடிகள் மற்றும் மரங்களின் அமைவிடமும் நமது வீட்டில் இருக்கும் செல்வம் மற்றும் நேர்மறை சிந்தனைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான வீடுகளில் கருவேப்பிலை செடி இருக்கும். இந்தச் செடி வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான இடத்தில் அமைந்தால் அந்த வீட்டில் செல்வ வளம் பெருகுவதோடு அமைதி மற்றும் சந்தோசம் நிலவும் எனவும் தெரிவித்துள்ளனர்.
வாஸ்து சாஸ்திரங்களின்படி கருவேப்பிலை செடி சந்திரனுக்கு உரிய திசையான மேற்கு திசையில் அமைய வேண்டுமாம். இதன் மூலம் அந்த வீட்டில் நிலவும் எதிர்மறை சிந்தனைகள் மறைவதோடு நேர்மறை சிந்தனைகள் பெருகும் மேலும் குடும்ப உறவுகளுக்கு இடையே இணக்கமும் அன்பும் அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் செல்வ வளம் பெருகுவதற்கு கருவேப்பிலை செடியானது தென்கிழக்கு மூலையில் அமைய வேண்டும் என வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் கிழக்கு மூலையில் கருவேப்பிலை செடி வைத்தால் அந்த வீட்டில் செல்வவளம் பெருகும். மேலும் வீட்டில் நிலவும் பணக்கஷ்டங்கள் மறையும் எனவும் கடன் தொல்லைகள் நீங்கும் என்றும் வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது. ஒரு வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டுமானால் அந்த வீட்டில் கருவேப்பிலை செடியை வாஸ்து சாஸ்திரத்தின் படி தென்கிழக்கு மூலையில் வளர்க்க வேண்டும். அந்தச் செடி வளர வளர அந்த வீட்டின் செல்வமும் வளரும் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கையாக இருக்கிறது.