முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தல் பெற… இந்த சூப்பரான ட்ரிங் தயார் செய்து குடிச்சு பாருங்க.!

06:05 AM Nov 26, 2023 IST | 1newsnationuser4
Advertisement

நமது கூந்தல் பளபளப்பாகவும் கருமையாகவும் நல்ல அடர்த்தியாகவும் வளர்வதற்கு என்ன தான் கிரீம்கள் எண்ணெய் மற்றும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும் நல்ல ஊட்டச்சத்துக்கள் கொண்ட பொருட்களை சாப்பிடுவதும் அத்தியாவசியமாகிறது.

Advertisement

கூந்தல் வளர்ச்சி மற்றும் முகப்பொலிவு ஆகியவற்றிற்கு எளிமையான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதற்கு முதலில் ஒரு வெள்ளரிக்காய் மற்றும் ஒரு நெல்லிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட வேண்டும்.

இவற்றுடன் சிறிதளவு புதினா இலைகள் சிறிது கருவேப்பிலை ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு டீஸ்பூன் ராக் சால்ட் ஆகியவை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இந்தக் கலவை நன்றாக அறைந்ததும் அதனை ஒரு கிளாஸில் ஊற்றி தினமும் காலையில் குடித்து வர வேண்டும்.

கூந்தல் ஆரோக்கியத்திற்கும் முகத்தின் பளபளப்பு இருக்கும் பல நன்மைகளை தரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் இந்த ஜூஸில் இருக்கிறது. மேலும் இது சிறந்த நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதற்கு இந்த பானம் உதவி புரிகிறது.

Tags :
DrinkhairHair growthHealth tip
Advertisement
Next Article