For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பட்டு போன்ற சருமம் வேண்டுமா.? நீங்க சமையலுக்கு யூஸ் பண்ற இந்த பொருட்களே போதும்.! குட்டி ப்யூட்டி டிப்ஸ்.!

05:22 AM Dec 28, 2023 IST | 1newsnationuser4
பட்டு போன்ற சருமம் வேண்டுமா   நீங்க சமையலுக்கு யூஸ் பண்ற இந்த பொருட்களே போதும்   குட்டி ப்யூட்டி டிப்ஸ்
Advertisement

சருமத்தின் அழகை பேணி பாதுகாப்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்றாகும். சருமம் பொலிவுடன் பளபளப்பாகவும் இருப்பது நமது முகத்தோற்றத்தை வசீகரமாக மாற்றுவதோடு நமது மனதிற்கு தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அழகு சாதன நிலையங்களுக்கு சென்று அதிக பொருட்செலவில் நமது அழகை மெருகேற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் வீட்டில் பயன்படுத்தக் கூடிய உணவுப் பொருட்களைக் கொண்டே முகத்தை ஜொலிக்க வைக்கலாம்.

Advertisement

முகத்தின் அழகை பேணுவதில் பாலாடை முக்கியப் பொழுது வகிக்கிறது. தினமும் இதனை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தின் வறட்சி நீங்கி முகம் பொலிவுடன் இருப்பதோடு மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். கடலை மாவு மஞ்சள் மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஃபேஸ் பேக் போல செய்து முகத்தில் அப்ளை செய்து கழுவுவதன் மூலம் முகப்பருக்கள் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் நீங்கி முகம் அழகாகவும் பளபளப்புடனும் மாறும்.

பப்பாளி பழத்தில் புரோட்டியோலிக் என்சைம் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பழத்தை முகத்தில் தடவுவதன் மூலம் இறந்த செல்களை நீக்கி முகம் பளபளப்பாகவும் ஈரப்பதத்துடன் இருப்பதற்கு உதவுகிறது. தேன் ஒரு இயற்கையான மருந்தாகும். இதில் ஆன்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் நிறைந்து இருக்கின்றன. இவை சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைப்பதோடு சருமத்தை நுட்பமாக பிரகாசிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழை ஜெல் சரும பாதுகாப்பில் முக்கியமான ஒரு பொருளாகும். இவற்றை முகத்தில் தடவி வருவதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் சர்ம வறட்சி தடுக்கப்படுகிறது. மேலும் நம் முகத்தை எப்போதும் நீரேற்றுடன் வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது. பொலிவான சருமத்தை பெறுவதற்கும் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.

Tags :
Advertisement