For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொழில் தொடங்கும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு... நடைமுறைகளை எளிதாக்கிய மத்திய அரசு...!

To facilitate business start-up, the Central Government has simplified Export Promotion Capital Goods Scheme procedures.
06:39 AM Jul 27, 2024 IST | Vignesh
தொழில் தொடங்கும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு    நடைமுறைகளை எளிதாக்கிய மத்திய அரசு
Advertisement

தொழில் தொடங்குவதை எளிதாக்க, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதன சரக்குகள் திட்ட நடைமுறைகளை மத்திய அரசு எளிதாக்கி உள்ளது.

தொழில் தொடங்குவதை எளிதாக்க, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதன சரக்குகள் திட்ட நடைமுறைகளை, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் எளிமைப்படுத்தியுள்ளது. பரிவர்த்தனை செலவுகளை குறைத்து, எந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதன் மூலம், ஏற்றுமதியாளர்கள் பயனடையும் விதமாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்கி, இந்தியாவின் உற்பத்தி போட்டித் திறனை அதிகரிப்பது என்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, இந்த மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது.

Advertisement

இதன் காரணமாக, ஏற்றுமதியாளர்கள் தாங்கள் இறக்குமதி செய்யும் மூலதன சரக்குகளை, தொழிற்சாலையில் நிறுவியதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கிடைக்கும் எனவும், மத்திய வர்த்தக தொழில்துறை தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் https://www.dgft.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

Tags :
Advertisement