Heart Attacks In Winter : குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க... காலை எழுந்த உடன் இதை செய்தால் போதும்...
பொதுவாக குளிர்காலத்தில் மாரடைப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க தொடங்கும். கொஞ்சம் கவனக்குறைவு கூட ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். குளிர்ந்த காலநிலை மற்றும் குளிர் காற்று ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணம். குளிர்ந்த காலநிலையில், ரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் குறைகிறது. ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. குறிப்பாக காலை நேரத்தில் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
இரவில் அல்லது காலையில் எழும் போது, உடனடியாக எழுந்திருக்க வேண்டாம், ஏனென்றால் குளிர்ந்த காலநிலையில் இரத்தம் கெட்டியாகிவிடும், உடனடியாக எழுந்தால், பல நேரங்களில் இரத்தம் இதயம் மற்றும் மூளைக்கு செல்ல முடியாது. இதன் விளைவாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம்.
எனவே, நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்தவுடன், முதலில், உட்காருங்கள். 20-30 வினாடிகள் உட்கார்ந்த பிறகு, சுமார் 1 நிமிடம் உங்கள் கால்களை கீழே தொங்கவிட்டு, பின்னர் எழுந்திருங்கள். இதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். குளிர்காலத்தில் மாரடைப்பைத் தவிர்ப்பது எப்படி என்று தற்போது பார்க்கலாம்.
குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
குளிர்ந்த வெப்பநிலை இரத்த நாளங்களின் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது, இது இரத்த விநியோகத்தை குறைக்கிறது. இதனால், இரத்த அழுத்தம் அதிகமாகி, மாரடைப்பு ஏற்படுகிறது.
குளிர்காலத்தில் மாரடைப்புக்கான அறிகுறிகள்
உயர் இரத்த அழுத்தம்
உயர் சர்க்கரை
அதிக கொலஸ்ட்ரால்
நெஞ்சு வலி
வியர்வை
மாரடைப்பை தடுப்பது எப்படி?
உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துங்கள், புகையிலை மற்றும் மது பழக்கத்தை கைவிட்டு, பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளுக்கு பதிலாக வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். தினமும் யோகா அல்லது பிராணாயாமம் செய்யுங்கள்.
நடைபயிற்சி, ஜாகிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன அழுத்தத்தை தவிர்க்கவும் உதவும்.
தேவையான சோதனைகள்
மாதத்திற்கு ஒரு முறை இரத்த அழுத்தம்
6 மாதளுக்கு ஒருமுறை கொலஸ்ட்ரால்
3 மாதங்களுக்கு ஒருமுறை இரத்த சர்க்கரை
மாதங்களில் கண் பரிசோதனை
வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை
உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த விஷயங்களைக் கட்டுக்குள் வைத்திருங்கள்
ரத்த அழுத்தம்
கொலஸ்ட்ரால்
சர்க்கரை அளவுகள்
உடல் எடை
ஆரோக்கியமான இதய உணவுத் திட்டம்
ஒரு நாளில் நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்கவும். உப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்கவும். முழு தானியங்கள், பருப்புகள் மற்றும் புரதங்களை உள்ளடக்கிய சமச்சீரான ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
Read More : காலையில் வாக்கிங் போறது நல்லது தான்.. ஆனா குளிர்காலத்தில் இவர்களுக்கு ஆபத்தாக மாறலாம்…!