முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நோட்...! குரூப்-4 காலி பணியிடங்கள் அதிகரிப்பா...? TNPSC கொடுத்த விளக்கம்

TNPSC has urged people not to believe rumors circulating on social media regarding Group-4 vacancies.
06:56 AM Oct 14, 2024 IST | Vignesh
Advertisement

குரூப்-4 காலி பணியிடங்கள் தொடர்பாக சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது.

Advertisement

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2024-ம் ஆண்டு குரூப்-4 தேர்வில் போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா என்று தொடர்ந்து கேள்விகள் வருகின்றன. 2022-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வு மூலம் 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 3 நிதி ஆண்டுகளுக்கான 10,139 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது, சராசரியாக ஓராண்டுக்கு 3,380 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தொடர்ந்து 2024-ல் குரூப்-4 தேர்வு மூலம் 2023-24, 2024-25 ஆகிய 2 நிதி ஆண்டுகளுக்கான 8,932 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது, ஓராண்டுக்கு 4,466 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அந்த வகையில், குரூப்-4 தேர்வு மூலம் சராசரியாக ஒரு நிதி ஆண்டுக்கு 1,086 வீதம் மொத்தம் 2,172 பணியிடங்கள் தற்போது கூடுதலாக நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு ஏற்கெனவே முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, குரூப்-4 பணியிடங்கள் தொடர்பாக சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளில் (நேர்காணல் அல்லாத பதவிகள்) உள்ள 654 காலி இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகள் இன்று (அக். 14) தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னையில் 45 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 161 மையங்களில் கணினி வழியில் இத்தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 95,925 பேர் பங்கேற்கின்றனர். செல்போன் போன்ற மின்னணு கருவிகளை தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல கூடாது.

Tags :
examgroup 4TNPSCTnpsc group
Advertisement
Next Article