வரும் ஜூன் 9-ம் தேதி TNPSC குரூப் -4 தேர்வு...! சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு... ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-Group IV பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு 09.06.2024 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மட்டும் தருமபுரி மற்றும் அரூர் கோட்டங்களில் மொத்தம் 228 தேர்வு மையங்களில் சுமார் 62630 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்லவும், கடைசிநேர அலைச்சல்களை தவிர்க்குமாறும். தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் "அரூர் வட்டத்திற்கு உட்பட்ட ( தேர்வு மைய எண்.0402 (Centre Code.0402) Hall No.023 5 Hall No.30 வரை உள்ள ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி ஆர்.கோபிநாதம்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. எம்.வேட்ரப்பட்டி. கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேங்கியாம்பட்டி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மொரப்பூர், அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம் ஆகிய தேர்வு மையங்களின் அஞ்சல் குறியீடு எண்.636 305 என் உள்ளது. மேற்கண்ட தேர்வு மையங்களின் அஞ்சல் குறியீட்டு எண். 635 305 ஆகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.