For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்வது எப்படி..? முழு விவரம்…!

TNPSC Group 4 Hall Ticket 2024 has been released by Tamil Nadu Public Services Commission (TNPSC) on 27th May 2024 for the TNPSC Group 4 examination schedule for 09th May 2024. Candidates can download TNPSC Hall Ticket from the direct link shared here
05:45 AM May 28, 2024 IST | Kathir
tnpsc group 4 exam  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்வது எப்படி    முழு விவரம்…
Advertisement

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6,244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர்(VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிக பணியிடங்கள், நிரப்புவதற்கு, இது ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம்.

Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குரூப் 4 தேர்வுக்கு பிப்ரவரி 28ஆம் தேதி வரை, தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தநிலையில், நேற்று (மே 27) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்டை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

  • 1. முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான www.tnpsc.gov.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதில் ஏற்கனவே பதிவு செய்தோர் என்ற பொத்தானை அழுத்தவும்.
  • 2. பின்னர் உங்கள் நிரந்தரப் பதிவு மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழையவும்.
  • 3. இப்போது திரையில் உங்கள் சுயவிவர பக்கத்தில், ஹால்டிக்கெட் என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • 4. இப்போது திரையில் தோன்றும் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-IV) 2024 என்பதற்கு நேராக டவுன்லோட் ஹால் டிக்கெட் என்று இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
  • 5. இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதிக் கொண்டு உள்நுழைய வேண்டும்.
  • 6. இப்போது திரையில் குரூப் 4 தேர்வு ஹால்டிக்கெட் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 குறித்து அறிவிக்கையைக் காண: https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/73-2024%20Press%20Release.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

Tags :
Advertisement