TNPSC குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் வெளியீடு…!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய TNPSC குரூப் 2, 2A முதல் நிலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்களை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி(TNPSC) குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II,தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 507 பணியிடங்கள் குரூப் 2விலும், உதவி ஆய்வாளர், உதவியாளர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட 1,820 காலிப்பணியிடங்கள் குரூப் 2ஏ-விலும் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இந்த தேர்வுக்கு ஆர்வமுள்ள பலரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.
இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதல் நிலை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 5.81 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல் நிலை தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வின் முடிவுகளை தெரிந்துகொள்ள www.tnpscresults.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வவில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மை தேர்வு வரும் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Read More: சீமான் சென்ற விமானம் தரையிரங்க முடியாமல் தவிப்பு.. என்ன ஆச்சு?