TNPSC 861 காலி பணியிடங்கள் அறிவிப்பு...! தேர்வு தேதி எப்பொழுது...? முழு விவரம்
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உதவி சோதனையாளர், எம்.வி.ஐ., சிறப்பு மேற்பார்வையாளர், ஜூனியர் டிராட்டிங் அதிகாரி, சர்வேயர், தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பலர் உட்பட மொத்தம் 861 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு தேர்வாணையம் திட்டமிடப்பட்டுள்ளது.
1.7.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், அதே பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42-க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50-க்குள்ளும், பொதுப் பிரிவினரைத் தவிர இதர பிரிவினர்களான எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் ஆதரவற்ற விதைகளுக்கு உச்ச வயதுவரம்பு இல்லை. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
டிஎன்பிஎஸ் நடத்தும் தமிழ் மொழித் திறன் தேர்வு மற்றும் பணிக்குரிய முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு & தமிழ் மொழித் திறனாய்வுத் தேர்வு 9.11.2024 அன்று நடைபெறும். முதன்மைத் தேர்வு 11.11.2024 முதல் 14.11.2024 நடைபெறும்.