முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

TN Police | ஹெல்மெட், சீட் பெல்ட்..!! இனி போலீசார் மீதும் வழக்குப்பதிவு..!! வெளியான அதிரடி உத்தரவு..!!

12:40 PM Feb 29, 2024 IST | 1newsnationuser6
Advertisement

ஹெல்மெட் அணியாமலும், காரில் சீட் பெல்ட் அணியாமலும் சென்று போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போலீசார் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

இருப்பினும் சென்னையில் பெரும்பாலான இடங்களில் போலீசாரும் தலைக்கவசம் அணியாமலும், காவல்துறை வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாமலும் செல்கின்றனர். பொதுமக்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கும் போலீஸார், போக்குவரத்து விதிகளை மீறும் காவல்துறையினர் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் எடு‌க்காதது ஏன் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இந்நிலையில், சென்னை போக்குவரத்து வடக்கு மண்டல துணை ஆணையர் அனைத்து உதவி ஆணையர்கள், ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், சென்னையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதேபோல் காவல்துறையின் கார் அல்லது ஜீப்பில் செல்லும் காவல்துறையினரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். அப்படி இல்லையென்றால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary : A case will be filed against the police

Read More : மாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த KPY பாலா..!! கண்ணீர் மல்க நன்றி..!!

Advertisement
Next Article