"ஐ.டி பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு.! அறநிலைய துறையில் ₹.48700/- வரை சம்பளத்தில்.! உடனடியாக விண்ணப்பிக்க தயாராகுங்கள்.!
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி கோவையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் இரவு காவலர் பணிகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணிக்கு 1 காலியிடமும் இரவு காவலர் பணிக்கு 2 காலியிடங்களும் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது.
கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்/ பி.எஸ்சி ஐ.டி/ பி.சி.ஏ போன்ற பாடப்பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கில டைப் ரைட்டிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணிகளுக்கு ஊதியமாக ரூ.15,300 முதல் ரூ.48,700/- வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இரவு காவலர் பணிக்கு ஊதியமாக ரூ.16,000 – ரூ.36,800/- வரை வழங்கப்படும்.
இந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தினை அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக 17.02.2024 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய hrce.tn.gov.in என்ற இணையதளம் முகவரியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.