LOK SABHA | 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த மம்தா பானர்ஜி.! களமிறங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்.!
2024 ஆம் வருட பொது தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மேற்குவங்க மாநிலத்தில் தொகுதி பங்கீடு ஏற்படாததை தொடர்ந்து தனியாக போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. அதேபோன்று மேற்குவங்க மாநிலத்தில் இருக்கும் 42 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டு இருக்கிறது.
மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டார். கூட்டணியில் அங்கம் வகித்தாலும் காங்கிரசை தவிர்த்து அனைத்து தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் 17 வது லோக்சபாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா இதற்கு முன்பு வெற்றி பெற்ற கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுவதாகவும் டிஎம்சி அறிவித்திருக்கிறது. மேலும் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான யூசுப் பதான் பஹரம்பூர் தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். மேலும் அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர் சத்ருகன் சின்கா அசன்சோல் தொகுதியில் போட்டியிடுகிறார்.