குழந்தைகள் நலன் துறையில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா..?
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி : இந்தப் பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகிய கல்வியில் (Master’s degree in the field of Psychology or Counselling) முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் உரிய சான்றின் ஒளி நகலுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் நபர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
ஊதியம்: தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துனர்களுக்கு வருகையின் மதிப்பு புதிய அடிப்படையில் சேவை வழங்க ஒரு வருகைக்கு நாள் ஒன்றுக்கு போக்கு வரத்து செலவு உட்பட ரூ. 1000/- வழங்கபடும். மேலும், விவரம் வேண்டுவோர் சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருவண்ணாமலை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
முகவரி : விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், வட்டாட்சியர் அலுவலக வளாகம், திருவண்ணாமலை pin (606601) தொலைபேசி எண் 04175223030 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2025 ஆகும்.