பாவங்கள் போக்கும் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் திருக்கோவில்.. இத்தனை சிறப்புகளா..?
பாவங்கள் போக்கும் சிவாலயங்களில் காசிக்கு நிகரான புகழ் பெற்ற சிவாலயமாக திருவாரூர் மாவட்டம் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது. தேவார பாடல்கள் பெற்ற கோவில்களில் 70ஆவது கோயிலாக வாஞ்சிநாதர் கோயில் அமைந்துள்ளது. மேலும் சைவ அடியார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் போன்ற மூன்று அடியார்களால் புகழ்ந்து பாடப்பட்ட கோயில் எனும் பெருமையைக் கொண்டது.
சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்களால் போற்றி கொண்டாட்டப்பட்ட கோயிலாக இருந்து வந்தது. இந்தக் கோயிலின் முக்கிய கடவுளாக எமதர்மர் இருப்பதுதான் ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயிலின் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. மேலும் மனித உயிர்களை எடுத்துச் செல்லும் பாவத்தை போக்க எமதர்மன் சிவபெருமானை நாடியுள்ளார். சிவபெருமான் ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயிலில் கடும் தவமிருந்து பூஜை செய்ய சொல்கிறார்.
அவ்வாறே கடும் தவம் இருந்து தன் பாவங்களைப் போக்கி சிவனின் அருள் பெற்றார் என்று புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் தன் பாவங்களை போக்க வேண்டிக் கொள்ளும் பொழுது அடுத்த ஜென்மம் இல்லாமல் அமைதியான இறுதி காலத்தை சிவபெருமான் வழங்குவார் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயிலில் அமைந்துள்ள தீர்த்த தளங்களில் குளிக்கும் போது ஏழு ஜென்ம பாவங்களும் விலகும் என்றும் கூறி வருகின்றனர்.
கோயில் சிறப்புகள்:
* இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும்.
* தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப்படுகிறது. சுமார் 558 அடி நீளமும், 320 அடி அகலமும் உடைய இவ்வாலயம் 3 கோபுரங்களுடனும், 3 பிரகாரங்களும் உடையது. பிரதான இராஜ கோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது.
* இத்தலத்தில் யமதர்மனுக்கு தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சம். கோவிலின் அக்னி மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கிய தனி சந்நிதி உள்ளது.
* மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்கள் பாவங்கள் தீர்ப்பதால் தன்னிடம் சேர்ந்துவிட்ட பாவங்களைக் போக்கிக் கொள்ள கங்கை இறைவனை வேண்டினாள். இறைவனும் எமனுக்கே பாவவிமோசனம் தந்த இத்தலத்தில் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி கூறினார். கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற 999 கலைகளுடன் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் ஜக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள். இத்தலத்து தீர்த்தமும் குப்த கங்கை எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியருள்கின்றனர்.
* இத்தலம் மூவர்த் தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி தென்கரைத் திருத்தலமாகும். மாணிவாசகப் பெருமானும் கீர்த்தித் திருவகவலிலும், திருக்கோவையாரில் 268-வது பாடலிலும் இத் திருத்தலத்தைக் குறித்துள்ளார். இது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பிலும் சிறந்து விளங்குகிறது. இத்தலம் ஸ்கந்தபுராணம், பிரும்மாண்டபுராணம், ஆக்நேயபுராணம் ஆகிய வடமொழி நூல்களில் மிகவும் சிறப்புடன் போற்றப்பட்டுள்ளன.
Read more ; அடேங்கப்பா பெரிய மனசு சார் உங்களுக்கு.. பொங்கல் பரிசாக இலவச வீட்டுமனை வழங்கிய உரிமையாளர்..!!