யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை..!! நடந்தது என்ன..? பாயும் நடவடிக்கை..!!
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் 32 அறைகளிலும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், யூடியூபர் டிடிஎஃப் வாசனும் அவரது நண்பர்களும் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் ப்ராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அந்த வீடியோவில், டிடிஎஃப் வாசன் அவருடைய ஒளிப்பதிவாளர் அசீஸ் ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த அறையை திறப்பதுபோன்ற வீடியோ இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுள்ளார். அதனை tirupathi Funny video என்ற பெரியல் டிடிஎஃப் வாசன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது. இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் குறும்பு வீடியோ எடுப்பது கேவலாக செயல். அத்தகைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்க தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான விஜிலன்ஸ் துறை செய்து வருகிறது.
Read More : ரூ.279-க்கு ரீசார்ஜ் பண்ணுங்க..!! இத்தனை சலுகைகளா..? புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல் நிறுவனம்..!!