கடையில் கிடைக்கும் பேப்பர் ரோஸ்ட் மாதிரி, வீட்டிலேயே தோசை சுட வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..
தோசக் கல்லில் ஒட்டாமல் முறுவலாக தோசை சுட வேண்டும் என்பது பலரது ஆசையாக இருக்கும். ஆனால், அனைவராலும் நினைத்த மாதிரி தோசை சுட வராது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ண போதும். கட்டாயம் கடையில் கிடைக்கும் பேப்பர் ரோஸ்ட் மாதிரி தோசை முறுகலாக சுடலாம். இதற்கு முதலில் நீங்கள், நீண்ட நேரம் வெறும் கல்லை அடுப்பில் வைக்க கூடாது. ஒரே கல்லில், சப்பாத்தி மற்றும் தோசையை சுடக்கூடாது. தோசை கல்லில் அதிக எண்ணெய் விட்டு தேய்க்கக் கூடாது. ஒரு சொட்டு எண்ணெய் விட்டு கல் முழுவதும் தேய்க்க வேண்டும்.
மிதமான சூட்டில் வைத்து தான் எப்போதும் தோசை சுட வேண்டும். ஒருவேளை உங்கள் தோசைக் கல் அதிக சூடாகி தோசை சுட வரவே இல்லை என்றால், கட்டாயம் அந்த கல்லை சீசன் செய்ய வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஒரு காட்டன் துணியில் புளி சுற்றி, அதை எண்ணெயில் தொட்டு தோசைக்கல்லில் 5 நிமிடம் தடவி அவ்வளவு தான், கல் பழைய நிலைமைக்கு வருவது மட்டும் இல்லாமல், தோசை முறுகலாக வரும். பெரும்பாலும் நான் ஸ்டிக் தோசைக் கல் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். இதனால் பெரும் ஆபத்து ஏற்படும். முடிந்த வரை, நமது பாரம்பரிய இரும்பு தோசைக் கல்லில் தோசை சுட பழகிக்கொள்ளுங்கள்.
Read more: இந்த பதிவை படியுங்க… இனி கணவன் மனைவி இடையே சண்டையே வராது!