இந்த கலர் பல்பு போட்டா, உங்களுக்கு தூக்கமே வராது…! தூக்க மருத்துவர் சொல்லும் அறிவுரை…!
தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை தூக்கமின்மை தான். ஆம், காலை முதல் என்ன தான் கடினமாக உழைத்தாலும் இரவில் தூக்கமே வரவில்லை என புலம்புபவர்கள் அநேகர். இப்படி தூக்கமின்மைக்கு மன அழுத்தம், உணவு எடுத்துக்கொள்வதில் மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளது. இரவில் தூக்கம் வருவதற்காக ஆயிரக்கணக்கில் மருத்துவத்திற்கு செலவு செய்பவர்கள் அநேகர் பெருகிவிட்டனர். அப்படி நீங்களும் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம், படுத்தவுடன் எளிதாக தூங்க சில டிப்ஸ் இதோ...
சில நேரங்களில், நீங்கள் சற்றும் யோசிக்காத விஷயங்கள் கூட தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம். ஆம், தூக்கத்திற்கு உதவும் இயற்கை ஹார்மோனான மெலடோனின் வெளியீட்டை ஒரு சில ஒளி பாதிக்கிறது . மூளையில் உள்ள பினியல் சுரப்பி இருட்டாக இருக்கும் போது மெலடோனின் உற்பத்தி செய்கிறது. ஆனால் செல்போன்கள், கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளி மெலடோனின் உற்பத்தியைத் தடுத்து விடும். இதனால் தான், உறங்க செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு செல்போன் மற்றும் லேப்டாப்பை ஓரம்கட்ட வேண்டும்.
ஒரு சிறந்த தூக்கத்திற்கு, உங்கள் அறையை இருட்டாக வைத்திருங்கள், ஆனால் உங்களுக்கு வெளிச்சம் தேவைப்பட்டால், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. ஆனால், நீலம், பச்சை போன்ற நிறங்களை நம் அறையில் பயன்படுத்துவதால், இது நாம் எழுந்திருக்க வேண்டிய நேரம் என நமது உடல் தவறாக உணர்த்துக்கொண்டு நமது தூக்கம் பாதிக்கப்படும். இதனால் மனதையும் உடலையும் தூக்கத்திற்கு தயார்படுத்தும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களை தூங்கும் அறையில் பயன்படுத்துவது நல்லது என தூக்கம் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும், லாவண்டர் மற்றும் சாமந்திப்பூவின் (chamomile) வாசனைகள் நமக்கு சீக்கிரமாக தூக்கத்தை ஏற்படுத்தும். இதனால், தலையனை அல்லது அறையில் இந்த வாசனை கொண்ட ஸ்ப்ரே பயன்படுத்துவது உங்கள் தூக்கத்திற்கு உதவும்.
Read More: தந்தையின் அருகில் துடிதுடித்த சிறுவன்; எமனாக மாறிய இரும்பு கட்டில்!!