தை பொங்கல்: இந்த நேரங்களில் மறந்தும் பொங்கல் வைக்காதீர்கள்.! ஜோதிட வல்லுநர்களின் அறிவுரை.!
வருகின்ற 15-ம் தேதி தைத்திங்கள் ஒன்றாம் நாள் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது உலகத் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாட இருக்கிறார்கள். இந்தப் பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவதோடு விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர்கள் ஜாதி மத பேதமின்றி பொங்கல் பண்டிகையை கலாச்சார பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகையின் போது அதிகாலை நேரத்தில் சூரிய பகவானை தொழுது மண்பானைகளில் பொங்கல் வைப்பது வழக்கம். நமது மரபின்படி எந்த வேலையை செய்தாலும் நல்ல நேரம் பார்த்து செய்வோம். அதுபோல பொங்கல் பானை வைப்பதற்கு உகந்த நேரம் எது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பஞ்சாங்க ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் பொங்கல் வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. எனினும் ராகு காலம் மற்றும் எமகண்டத்தை தவிர மற்ற நேரங்களில் பொங்கல் வைக்கலாம். பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்ற 15 ஆம் தேதி காலை 5 மணி முதல் காலை 7:30 மணி வரை பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரமாக கணக்கிடப்பட்டிருக்கிறது. மேலும் காலை 7:30 மணியிலிருந்து 9:00 மணி வரை ராகு காலம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து 10:30 மணியிலிருந்து 12 மணி வரை எமகண்டம் இருக்கிறது. இந்த நேரங்களில் பொங்கல் வைக்க வேண்டாம் என ஜோதிட வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.