For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாய்வதற்கான நேரம் இது!… புதிய அணியை தொடங்க திட்டம்!… மவுனம் கலைத்த தல தோனி!

06:10 AM May 25, 2024 IST | Kokila
பாய்வதற்கான நேரம் இது … புதிய அணியை தொடங்க திட்டம் … மவுனம் கலைத்த தல தோனி
Advertisement

Dhoni 'New Team': ஐபிஎல் தொடரின் கடைசி பிளே ஆப் சுற்றுப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எலிமினேட்டர் போட்டிக்கு முன்னேறியது.இப்போட்டியின் முடிவுக்கு பிறகு மகேந்திர சிங் ஓய்வு குறித்த விவாதம் சூடு பிடிக்க தொடங்கியது. ரசிகர்களும் தங்களது எக்ஸ் பக்கத்தில் #ThanksThala என்ற ஹேஸ்டாக்கில் தோனிக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement

இதையடுத்து, மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சீசன் மகேந்திர சிங் தோனியின் கடைசி சீசனா அல்லது அடுத்த சீசனிலும் தோனி சென்னை அணிக்காக தனது திறமையை வெளிப்படுத்துவாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

தோனி ஓய்வு பெறுவது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இதற்கிடையில் மகேந்திர சிங் தோனி சமூக வலைதளங்களில் மூன்று வரி பதிவை எழுதி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தோனி தனது பேஸ்புக் பக்கத்தில், “ இது பறக்க வேண்டிய நேரம். முக்கியமானதை செய்ய வேண்டிய நேரம் இது. நான் எனது சொந்த அணியை தொடங்குகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இத்துடன் கோப்பை ஒன்றின் எமோஜியும் அதில் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் ஐ.பி.எல்.-ல் தோனி சொந்த அணியை தொடங்க உள்ளாரா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இருப்பினும் எம்.எஸ். தோனி பதிவிட்டுள்ள இந்த பதிவு பிரபல ஆட்டொமொபைல் நிறுவனமான சிட்ரோயனுக்கு விளம்பரமாக இருக்கலாம் என்று கருத்துகள் நிலவுகின்றன. ஏனெனில் அந்த நிறுவனத்தின் பெயரை இந்த பதிவுடன் டேக் செய்து பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரின் கடைசி பிளே ஆப் சுற்றுப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எலிமினேட்டர் போட்டிக்கு முன்னேறியது.இப்போட்டியின் முடிவுக்கு பிறகு மகேந்திர சிங் ஓய்வு குறித்த விவாதம் சூடு பிடிக்க தொடங்கியது. ரசிகர்களும் தங்களது எக்ஸ் பக்கத்தில் #ThanksThala என்ற ஹேஸ்டாக்கில் தோனிக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையடுத்து, மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சீசன் மகேந்திர சிங் தோனியின் கடைசி சீசனா அல்லது அடுத்த சீசனிலும் தோனி சென்னை அணிக்காக தனது திறமையை வெளிப்படுத்துவாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

தோனி ஓய்வு பெறுவது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இதற்கிடையில் மகேந்திர சிங் தோனி சமூக வலைதளங்களில் மூன்று வரி பதிவை எழுதி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தோனி தனது பேஸ்புக் பக்கத்தில், “ இது பறக்க வேண்டிய நேரம். முக்கியமானதை செய்ய வேண்டிய நேரம் இது. நான் எனது சொந்த அணியை தொடங்குகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இத்துடன் கோப்பை ஒன்றின் எமோஜியும் அதில் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் ஐ.பி.எல்.-ல் தோனி சொந்த அணியை தொடங்க உள்ளாரா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இருப்பினும் எம்.எஸ். தோனி பதிவிட்டுள்ள இந்த பதிவு பிரபல ஆட்டொமொபைல் நிறுவனமான சிட்ரோயனுக்கு விளம்பரமாக இருக்கலாம் என்று கருத்துகள் நிலவுகின்றன. ஏனெனில் அந்த நிறுவனத்தின் பெயரை இந்த பதிவுடன் டேக் செய்து பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, MS தோனி சமீபத்தில் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் பிராண்டான Citroen இன் புதிய விளம்பரத்தில் இடம்பெற்றார். மே 24, வெள்ளிக்கிழமை அன்று இந்த விளம்பரம் வெளியிடப்பட்டது.

Readmore: பயங்கரம்…! இன்று உருவாக்கும் புயல்…! மணிக்கு 110 முதல் 130 கி.மீ. வேகத்துடன் காற்று…!

Advertisement