முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'உங்க கடமையை முடிக்க மாலை 6 மணி வரை தான் டைம்’..!! ’மிஸ் பண்ணிடாதீங்க’..!! சத்யபிரதா சாஹூ அறிவிப்பு..!!

08:27 AM Apr 18, 2024 IST | Chella
Advertisement

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் நபர்கள் தபால் வாக்கு பதிவு முறையில் தங்கள் வாக்கை பதிவு செய்ய முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்காக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, தபால் வாக்குப்பதிவு விருப்ப விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு பெறப்பட்டது.

Advertisement

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் தேர்தல் நாளில் வாக்களிக்க முடியாது என்பதால், அவர்களுக்கும் தபால் வாக்குப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 6 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தபால் வாக்கு பதிவு செய்யலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று தங்களின் தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : ரூ.1,400 கோடிக்கு சொத்து..!! எக்கச்சக்க முதலீடு..!! வெளிநாடுகளில் குடியிருப்பு..!! யார் இந்த பெண் வேட்பாளர்..?

Advertisement
Next Article