For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி...! பயிர் காப்பீடு செய்ய 2024-ம் ஆண்டு மார்ச் வரை கால அவகாசம்...! முழு விவரம்...

06:10 AM Nov 02, 2023 IST | 1newsnationuser2
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி     பயிர் காப்பீடு செய்ய 2024 ம் ஆண்டு மார்ச் வரை கால அவகாசம்     முழு விவரம்
Advertisement

கரும்பு பயிர்க்கு 31.03.2024 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டு என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் ஆண்டில், திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (RPMFBY) சம்பா (சிறப்பு) மற்றும் நவரை / கோடை (ராபி) பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படுகிறது. தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Advertisement

நெல் II,பருத்தி II பயிர்கள் சம்பா பருவத்திலும், மக்காச்சோளம், நிலக்கடலை, ராகி, கரும்பு பயிர்கள் நவரை, கோடை பருவத்திலும் (ராபி) அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. சம்பா பருவத்தில் காப்பீடு செய்யப்படும் நெற்பயிர்க்கு 15.11.2023 ஆம் தேதி காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவரை / கோடை பருவத்தில் காப்பீடு செய்யப்படும் மக்காச்சோளம், நிலக்கடலை, ராகி பயிர்க்கு 31.12.2023 ஆம் தேதியும் மற்றும் கரும்பு பயிர்க்கு 31.03.2024 ஆம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.550.50, பருத்தி ஏக்கருக்கு ரூ.628.04, நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.311.25, ஏக்கருக்கு ரூ.169.12, கரும்பு ஏக்கருக்கு ரூ.2600 மக்காச்சோளப்பயிருக்கு ரூ.388.65 செலுத்தினால் போதுமானது.

எனவே, சம்பா மற்றும் நவரை , கோடை பருவங்களில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்), தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள "விவசாயிகள் கார்னரில்" (www.pmfby.gov.in) நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் (1433) / இ-அடங்கல் / விதைப்பு சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhaar Card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்) , தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று கொள்ளலாம்.

Tags :
Advertisement